பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

போபால்,ஜன.3- மத்தியப்பிரதேச மாநி லத்தில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரி ழந்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2015 மே 4ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் சட்டாபூரில் இருந்து பன்னாவுக்கு தனியார் பயணிகள் பேருந்து புறப்பட்டது. பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். ஓட்டுநர் சம்சுதீன் (47) ஆரம்பம் முதலே பேருந்தை அதிவேகமாக இயக்கி உள்ளார். மெதுவாக செல்ல பயணிகள் கூறியும் அவர் கேட்கவில்லை. மால்டா மலைப்பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 22 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், ஓட்டுநர் சம்சுதீன் வெளியே குதித்து தப்பினார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி பேருந்து உரிமையாளர் கஜேந்திரா பாண்டே, ஓட்டுநர் சம்சுதீன் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.பி.சோன்கர் விசாரித்தார். சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த வழக்கு விசாரணையில்   தீர்ப்பு வழங்கப்பட்டது. பேருந்து உரிமை யாளர் கஜேந்திர பாண்டேவுக்கு 10 ஆண் டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. ஒவ்வொரு பயணியின் உயிரிழப்புக் கும் தனித்தனியாக ஓட்டு நருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண் டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி ஆர்.பி.சோன்கர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment