ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

நீட் தேர்வு வழக்கு காரணமாக, முது நிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைப்பு. கரொனா தொற்று அதிகரிக்கும் நிலையில் 80,000 மருத்து வர்களின் படிப்பு பாதிப்பு.

கரோனா தொற்று காரணமாக அய்ந்து லட்சம் பேர் இந்தியாவில் இறந்துள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றைப் பற்றி கவலைப்படாமல் 2024 தேர்தலை மட்டும் கணக்கில் வைத்து மோடி அரசு பயணிக்கிறது என மூத்த பத்திரிக் கையாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சம் என்பதை நியாயப்படுத்தி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

தி டெலிகிராப்:

கேரள காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ்.அபிமானிகள் உள்ளனர் என கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் ஒப்புதல்.

தி ஹிந்து:

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செப்டம்பர் 2022 வரை ஒத்தி வைப்பு, மோடி அரசு முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால்,  மோடி அரசுக்கு மாற்றாக இடது சாரி கட்சிகள் இடம் பெற இயலாது என சிபிஅய். கட்சியின் தேசிய செயலர் பினாய் விஷ்வம், எம்.பி., கருத்து.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment