சென்னை, ஜன.28 கரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணமாக தமிழ்நாட்டில் 2,356 தெருக்கள் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடும் முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு,
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,868 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. செங்கல்பட்டில் 121, தஞ்சாவூரில் 62 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் 23 பகுதிகளும், கோவையில் 21 பகுதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: புகார்கள் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு
சென்னை, ஜன.28 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்படிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்துவதற்கு 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால், அதனை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் ‘புகார் மய்யம்‘ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மய்யம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24*7 இயங்கும்.
பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண்களில் தெரிவிக் கலாம். கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்: 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 மேற்கண்ட கட்டணமில்லா தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment