இந்தியாவில் தொடர்ந்து சரியும் தொற்று.. கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கரோனா: 893 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

இந்தியாவில் தொடர்ந்து சரியும் தொற்று.. கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கரோனா: 893 பேர் உயிரிழப்பு

புதுடில்லி, ஜன.30  நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.93 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

இன்று (30.1.2022) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,34,281 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,92,522 ஆக உயர்ந்தது.

* புதிதாக 893 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,94,091 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,52,784 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,87,13,494 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,84,937 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.21% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.59% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,65,70,60,692 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (29.1.2022) ஒரே நாளில் 62,22,682 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment