8ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிப்.1ஆம் தேதி வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

8ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிப்.1ஆம் தேதி வெளியீடு

சென்னை, ஜன.30 8ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in   என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment