“நியோகோவ் வைரஸ்” மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

“நியோகோவ் வைரஸ்” மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் தகவல்

புதுடில்லி, ஜன.30 தற்போது சார்ஸ் கோவிட் வைரஸ் குடும்பத்தில் இருந்துநியோகோவ் வைரஸ்வந்திருக்கிறது. இது கரோனா வைரசின் உருமாற்றம் கிடையாது.

சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் 2019ஆம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கரோனாவால் உலக நாடுகள்  இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப் பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்றுப் பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழு மையாக நீங்கவில்லை. இந்த நிலையில், உலக அளவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந் துள்ளது.

அதிக பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட தாக உள்ளது.

தற்போது உலகம் முழு வதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன.

இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப் பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.

உலக சுகாதார அமைப்பு, அய்ரோப் பிய யூனியன் நாடுகள் கரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக் காவில் மெர்ஸ் கோவ் என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-இல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரசாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியா ளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோத னைதான். முழுமை யாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரிய வரும்.

கட்டுப்படுத்த முடியாது

இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடி யாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் அது பற்றி பயப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பொதுவாக விலங்குகளிடையே பரவும் ஒரு வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வேண்டுமென்றால் அதற்கு அந்த வைரஸ் உருமாற்றம் அடைய வேண்டும். மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ற குணங்கள் ஆர்.என்.., டி.என்.., புரோட் டின் ஆகியவை அந்த வைரசில் இருக்க வேண்டும். இவைகளை உள்ளடக்கிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள்தான் மனிதர்களிடையே பரவும் திறனை கொண்டிருக்கும்.

வவ்வாலிடம் உள்ள சார்ஸ் கோவிட் குடும்ப வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவியது.

தற்போது சார்ஸ் கோவிட் வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோகோவ் வைரஸ் வந்திருக்கிறது. இது கரோனா வைரசின் உருமாற்றம் கிடையாது.

நியோகோவ் வைரஸ்இன்னும் மனிதர்களிடம் கண்டறியப்படவில்லை. தற்போது இந்த புதிய வைரஸ் மனிதர் களிடையே தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை. எனவே தற்போதைய நிலையில் நியோகோவ் வைரஸ் பற்றி பயப்பட தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அதேவேளையில் மற்றொரு எச்சரிக் கையையும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நியோகோவ் வைரசில் ஒரே ஒரு சிறிய உருமாற்றம் அடைந்தால் கூட மனிதர்களிடம் பரவக்கூடிய திறனை பெற்றுவிடும்.

ஏனென்றால் நியோகோவ் வைரஸ் கரோனா மற்றும் மெர்ஸ் வைரஸ் ஆகிய இரண்டின் கலவையாக உள்ளது. மிகவும் வேகமாக பரவி மிக அதிக மரணத்தைநியோகோவ் வைரஸ்ஏற்படுத்திவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 1920ஆம் ஆண்டுகளில் பறவை களிடம் கரோனா வைரஸ் கண்டறியப் பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு சார்ஸ் என்று பெயரிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு புதிய வகை கரோனா சவுதி அரேபியாவில் பரவியது.

இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment