தமிழ்நாட்டில் 28,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 53 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

தமிழ்நாட்டில் 28,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 53 பேர் உயிரிழப்பு

சென்னை, ஜன.28 தமிழ்நாட்டில் 53 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ள னர். 28 ஆயிரத்து 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய (27.1.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப் பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 258 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 16,089 ஆண்கள், 12,426 பெண்கள் என மொத்தம் 28 ஆயிரத்து 515 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென் னை யில் 5,591 பேரும், செங்கல்பட்டில் 1,696 பேரும், கோவையில் 3,629 பேரும், ஈரோட்டில் 1,314 பேரும், கன்னியா குமரியில் 970 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர். குறைந்த பட்சமாக பெரம் பலூரில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேருக்கும், 12 வயதுக் குட்பட்ட 984 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 ஆயிரத்து 628 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இதுவரை 32 லட்சத்து 52 ஆயிரத்து 751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய நில வரப்படி 9 ஆயிரத்து 495 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 444 பேர் ஆக்சி ஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 1,120 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

53 பேர் உயிரிழப்பு

196 நாட்களுக்கு பிறகு கரோனா உயிரிழப்பு தமிழ்நாட்டில் 50-அய் கடந்துள்ளது. அந்தவகையில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனி யார் மருத்துவமனையில் 31 பேரும் என 53 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதி
ல்
அதிகபட்சமாக சென்னையில் 13 பேரும், கோவையில் 7 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தஞ்சாவூர், மதுரையில் தலா 3 பேரும் உள்பட 22 மாவட்டங்களில் உயிரி ழப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாவட்டங் களில் உயிரிழப்பு இல்லை. உயிரிழந்த 53 பேரில் 52 பேர் இணை நோயாளிகள் ஆவர்.

தமிழ்நாட்டில் இதுவரை மொத் தம் 37 ஆயிரத்து 412 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள் ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 28 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச் சையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் உள்ளனர்.

 இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment