சென்னை, ஜன.28 தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனை ரிசர்வ் வங்கி அதிகாரி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டில் அனைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவ லகங்களில் குடியரசு தினம் 26.1.2022 அன்று கொண்டாடப்பட்டது. சென்னை பாரிமுனையில் அமைந் துள்ள இந்திய ரிசர்வ் வங்கியிலும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி தேசியக் கொடியை ஏற்றினார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது பெண் அதிகாரி உள்பட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்கவில்லை. மாறாக, இருக் கையில் தொடர்ந்து அமர்ந்திருந் தனர். இதுகுறித்து அவர்களிடம் அங்கிருந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
கடும் கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து அவ மதிப்புக்கு திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வாழ்வு ரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
கவிஞர் வைரமுத்து உள்பட பலர் சமூக வலைதளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரல் வலுத்து வருவதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக் குள் வந்துள்ளது.
வருத்தம்
இந்த நிலையில், தமிழ்நாடு நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேற்று தலைமைச் செயலகத்தில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி உள்ளிட்ட சில அதிகாரிகள் நேரில் (27.1.2022) சந்தித்தனர். அப்போது அமைச் சருக்கு எஸ்.எம். என்.சாமி பூங் கொத்து வழங்கினார். அப்போது ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அதிகாரிகள் எழுந்து நிற்காததற்காக வருத்தம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment