30ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

30ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிப்பு

சென்னை, ஜன.29 தமிழ்நாட்டில் 30ஆம் தேதி நியாய விலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை ஞாயிறு அன்று தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

 பொது வினியோக திட்டத்தின் கீழ் ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த வாரம் ஞாயிறு (30ஆம் தேதி)  நியாய விலைக் கடைகள் செயல்படும் என்பதும் உணவு பங்கீட்டு அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வழக்கம் போல் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment