தமிழ்நாட்டில் தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

தமிழ்நாட்டில் தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல்


சென்னை, ஜன.29 தமிழ்நாட்டில் தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடு தலாக 11 லட்சம் தடுப்பூசிகள் செலுத் தப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சருடனான கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார். 

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று (28.1.2022) காணொலி காட்சி மூலம் நடை பெற்ற ஆய்வு கூட்டத்தில் மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ள மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி நிலை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 27.1.2022 வரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

5.2 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கோவை, செங்கல் பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்கள் நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக கண்டறியப் பட்டுள்ளன.

கூடுதலாக 11 லட்சம் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் 1,33,246 சிறப்பு படுக்கை வசதிகளில், 8 சதவீத உள்நோயாளிகளும், 42 ஆயிரத்து 660 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக் கைகளில் 10 சதவீத உள்நோயாளி களும், 10 ஆயிரத்து 147 தீவிர சிகிச்சை படுக்கைகளில் 11 சதவீத உள்நோயாளிகள் மட்டுமே அனு மதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மொத்தம் மக்கள் தொகை யில் 18 வயதுக்கு மேல் 5.78 கோடி பேர் உள்ளனர். இதில் 89.83 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 67.30 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட் டுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 தடுப் பூசிகள், அதாவது 6 சதவீத தடுப் பூசிகள் வீணாக்கப்பட்டது. ஆனால் தற்போது வீணாக்கப்பட்டதை விடவும் 11 லட்சத்து 14 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் அதிகமாக செலுத் தப்பட்டுள்ளது. இதுவரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 3 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரத்து 487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. மேலும் இன்று (29.1.2022) 20ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஒன்றிய அரசுக்கு நன்றி

தமிழ்நாட்டில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குள்ளான 77.34 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 31 ஆயிரத்து 187 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. 

இறுதியாக கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப் படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் தமிழ் நாட்டுக்கு ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குநர் டாக்டர் சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment