ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை முடிக்கப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை முடிக்கப்படும்

திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருவாரூர், ஜன. 31- திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆர்.ஈவேரா தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் .அசோக்ராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ரெ.புக ழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பகுத்த றிவாளர் கழக பொதுச் செய லாளர் வி.மோகன், மாநில துணைத்தலைவர் புயல்.சு.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர்கள் மாநில அமைப் பாளர் இரா.சிவக்குமார், மண் டல மகளிர் அணி செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் சு.ஆறுமுகம், கழக மாவட்ட  துணைத்தலைவர் கி.அருண்காந்தி, பகுத்தறிவு ஆசிரியரின் மாவட்டச் செய லாளர் ஆர்.எபனேசர் ஜான் சன், மாவட்ட அமைப்பாளர் மீ.ரவி, பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் நன்னிலம் எஸ்.கரிகாலன், ஒன்றியச் செய லாளர் தனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்ன தாக நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ராஜேஷ் வர வேற்றார். இறுதியில் கொர டாச்சேரி ஒன்றிய தலைவர் மா.செ.கலைச்செல்வன் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பகுத்தறிவாளர் கழக உறுப்பி னர் சேர்க்கையை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் முடிப்பது என கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

திருவாரூர் மாவட்ட பகுத் தறிவாளர்கழகத்தின் சார்பில் விடுதலை, மாடர்ன் ரேசன லிஸ்ட், உண்மை ஆகிய இதழ்க ளின் சந்தா 50 செலுத் துவது என முடிவு செய்யப் பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி  மாணவ மாணவிகளிடம் வாயில் கூட்டங் கள் மூலமாகவும் துண்டறிக்கை கள் மூலமாகவும் மூடநம்பிக் கைக்கு எதி ரான  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு அர சின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியினை வரவேற்று மக்க ளிடம் கொண்டு செல்வது என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தின் நன்னிலம் மேனாள் நகர தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வை.மாறன் அவர்களது மறை வுக்கும், கழக மாவட்ட மகளி ரணி செயலாளர் சரசு அவர்க ளின் இணையர் சோழங்க நல்லூர் சீனிவாசன், திருவாரூர் ஒன்றிய கழக கழக மகளிரணி செயலாளர் சைனம்புவின் இணையர் நடேசன் ஆகியோ ரது மறைவிற்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது.

No comments:

Post a Comment