ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை: கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை: கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

ஈரோடு, ஜன. 31- ஈரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக புரட் சியாளர் அண்ணல் அம்பேத் கர் அவர்கள் சிலை வைக்க பல்வேறு அமைப்புகள் பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கை மனு, ஆர்ப்பாட்டங்கள், போராட் டங்கள் என முயற்சிகள் மேற் கொண்டு வந்தனர்.

சிதறியநெல்லிக்காய் போன்று இருந்ததாலும் ஆட்சியாளர்களின் ஆர்வமின்மை யின் காரணமாகவும் கானல் நீராக இருந்த சிலை வைப்பு தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான பயணத்தில் எவ்வித சமரச மின்றி விருப்பு வெறுப்பு இல் லாமல் பயணிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையிலான திராவிடர் கழகம் இதற்கான முயற்சிகளை எடுக்கபல்வேறு அமைப்புகள் கழக மாநில அமைப்புச் செய லாளர் ஈரோடு .சண்முகத் திடம் கோரிக்கை வைத்து அவரின் தலைமையில் சிலை அமைப்பு குழு அமைக்கவும் விடுத்த கோரிக்கையின் படி 28அமைப்புகள் ஒன்று கூடி கழக மாநில அமைப்புச் செய லாளர் ஈரோடு..சண்முகம் தலைமையில் ஒருமனதுடன் இயங்கி தற்போது வெற்றியும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களின் பெரும் முயற்சியின் காரண மாக பல்லாண்டு கால மக்கள் கோரிக்கை நிறைவேறும் வண் ணம் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் சிலை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சிலை அமைப்பு குழுவில் பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகளாக களம் காண்பதால் பல்வேறு கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல் கள் வந்தன, நீயா? நானா? என்ற நிலை வந்த போது அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்கள் உட னடியாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண் முகத்தை அழைத்து அவர் களை சமாதானப்படுத்தி சிலை தான் முக்கியம்,அதனை தடுக் கவோ அல்லது தள்ளிப்பாடவோ காரணமாக எந்த அமைப்பும் இருக்க வேண்டாம் என அவர் களிடம் விளக்கி சமாதான படுத்த கேட்டுக் கொண்டார். அமைச்சர்.சு.முத்துச்சாமி அவர்கள் முதலமைச்சரிடம் தொடர்ந்து அதற்கான முயற்சி யில் ஈடுபட்டு கடந்த 22-.01.-2022இல் அனுமதி பெற்றுக் கொடுத்து உடனடியாக சிலை அய்தராபாத்திலிருந்து வரப்பெற்று இந்திய குடியரசு தினமான 26ஆம் தேதி சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் காணொலி வாயிலாக சிலை திறந்து வைத்தார்.

தான் அமைச்சராக பொறுப்பு ஏற்ற காலத்தில் இருந்து பெருந் தொற்று,மழை, பத்தாண்டு கால நிர்வாக சீர்கேட்டால் பின்தங்கிய ஈரோடு மாவட்ட வளர்ச்சி பணிகள் இவைகளை சரிசெய்ய தமிழ்நாடு முதல மைச்சரின்சமூக நீதிக்கான பயணத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அப் பணிக்கு மகுடம் சூட்டும் வித மாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலையை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் வைக்க முழு முதற்காரணமாக இருந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமியை அனைத்து கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மனதார பாராட் டிய வண்ணம் உள்ளார்கள்.தொடர்ந்து அவருக்கு பக்க பலமாக இருந்து எவ்விதத்தி லும் மாறுபடாமல் அனை வரையும் ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்தி சிலை அமைப்பு குழுவை சரியான பாதையில் வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற திராவிடர் கழக மாநில அமைப் புச் செயலாளர் ஈரோடு .சண் முகத்தை அனைத்து அமைப் புக்களை சார்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக பெரியார் மன் றத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து பாராட்டி சென்றனர்.

சிலை வைக்கும் பணியில் திராவிடர் கழகம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிலை வைப்பதே தங்களின் இலட்சியமாக பாடுபட்டதை பாராட்டிய போது அவர்களி டம் கழக அமைப்புச் செயலா ளர் ஈரோடு சண்முகம் தானும், திராவிடர் கழகமும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் கொள்கை வழியில் பயணிப்பதால் எவ்வித சபலத் திற்கு இடம் தராமல் திராவிடர் கழகம் தனது பங்களிப்பை தந்ததாக பெருமையுடன் கூறிதோழர்கள் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு,மற்றும் இயக்க நூல்களை, படித்து சமூக நீதிக் கான தங்கள் பயணத்தை தொடர வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் பெரியார் மன்றத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் சிலை அமைப்பு தலைவரும், திராவிடர் கழக அமைப்புச் செயலாளருமான. ஈரோடு..சண்முகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிக்குழு செயலாளர், பெருமா வளவன் தலைமையில் சால்வை அணிவித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி.மற் றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஈரோடு மாவட்ட செயலாளர் .தமிழ்க்குமரன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment