பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 31 வரை வழங்கப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 31 வரை வழங்கப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு

 

சென்னை, ஜன.8 ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 6 ஆம் தேதி வரை 43 லட்சத்து 85 ஆயிரத்து 111 அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். சில இடங்களில் சில பொருட்களை விட்டுவிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இது போன்ற புகார்களை தவிர்த்திட அனைத்து பொது வழங்கல் திட்ட அங்காடிகளில் பொருட்களின் பட்டியலை வைக்கவும், பொருட்களை பெறுபவர்களிடம் அனைத்து பொருட்களும் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கலில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் ஒன்றிணைந்து இந்த பணியை எந்த வித புகாருக்கும் இடமின்றி செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ள அவர், வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment