மாணவர்கள் நல்ல எண்ணங் களையும் பழக்க வழக்கங்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் கணினி வழியாக நடைபெறும் குற்றங் களிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது, முகநூல். புலனம் இவற்றினை சரியாக பயன்படுத்துவது, எலக்ட்ரானிக் சாதனங்களை அதிக அளவில் பயன் படுத்தாமல் தேவைக்கேற்ப பயன்படுத் துவது மாணவர்களின் கடமையாகும். மேலும் மாணவர்கள் செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மற்றவர்களின் தனிமனித
சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க வேண் டும் என்று கூறினார்.
மாவட்ட காவல் துறை, கூடுதல் கண்காணிப்பாளர் பி. கென்னடி
சிறப்புரையாற்றும் போது, ஓ.டி.பி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரிந்தால் உடனே 155260 என்ற எண்ணை அழைக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சமுதாயத்திற்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டுமென்றும் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக சைபர் க்ரைம் காவல் நிலையத்தையோ அல்லது இணையத்தளத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் சைபர் க்ரைம் குறித்த தகவல்களை, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களோடு பகிர்ந்துக் கொண்டு விழிப்புணர்வை அடைய செய்வது மாணவர்களின் கடமையாகும்.
மேலும் இக்கருத்தரங்கில் கணினி புல முதன்மையர் பேரா. ஜெ. செயசித்ரா சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர்
எஸ். கார்த்திகேயன் சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மென் பொருள் துறைத்தலைவர் பேரா.
டி. மகேஸ்குமார் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment