கரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் ‘வைட்டமின் டி3’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

கரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் ‘வைட்டமின் டி3’

கரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒமைக்ரான் என்ற புதிய மாறுபாடு தோன்றி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறதுதடுப்பூசிகளை விட நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கு ஊட்டச்சத்து முக்கியமானது. உடலில் போதுமான அளவு இருக்க வேண்டிய வைட்டமின்களில் வைட்டமின் டி3 முக்கியமானதாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உடலில் இந்த வைட்டமின் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வைட்டமின் டி 3 உட்கொள்ளல் மற்றும் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment