"போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

"போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது"

- பேராசிரியர் ஜெயரஞ்சன்  -

நான் கடந்த ஆறு மாதமாக நிர்வாகத்துக்குள் இருந்து வரும் நிலையில் அதை உணர்கிறேன். இதுபற்றி விரிவாக உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், உண்மை -அவர்களின் பிடியில் இருந்து மீள்வதற்கு படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்களும் மீளலாம் என்று என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், குழிகளை வெட்டிக் கொண்டே இருக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னா அடுத்து எங்க குழிவெட்டியிருக்கான்னு தெரியமாட்டேங்குது. இந்த பத்து வருடங்களில் அவர்களின் வலை அந்த அளவுக்கு நுட்பமாகவும், ஆழமாகவும் விரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்க அது தெரிவதே இல்லை. அந்த வலையை அறுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அது சாமானியமல்ல. ஏன் அப்படினு கேட்டீங்கன்னா, நமக்குன்னு இருக்கும் அதிகாரம் ரொம்பக் குறைவு. இப்ப தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அதிகாரம் ஓரளவுக்கு இருக்கு.

ஆனா, இந்த அதிகாரத்தின் இன்னொரு பகுதி, பல அங்கங்கள் அவர்களிடம் இருக்கிறது, டில்லியில் செகரட்டரியேட் என்று ஒன்று இருக்கிறது. அவர் களோடு சேர்ந்துதான் நாம் இத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. நாம் இங்கே வேலை செய்யும்போது அவர்கள் அங்கிருந்து போடக் கூடிய உத்தரவுகள், திட்டங்களை எல்லாம் எதிர்த்து இடைவிடாது போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள், அதுமட்டுமல்ல... முன்பெல்லாம் அவர்களின் கொள்கைகளை மறை முகமாகத் திணிப்பதாகக் கருதினோம். இப்போது மறைமுகமெல்லாம் கிடையாது, ஓப்பனா,நேரடியா இதைத்தான் செய்யணும்னு சொல்கிறார்கள். ரிவ்யூக்கு வர்ற அதிகாரிகளாக யாரை அனுப்பு கிறார்கள்னு கேட்டீங்கன்னா சாஸ்திரிகளையும் மேஸ்திரிகளையும் அனுப்பறாங்க. அவர்கள் என்ன கேட்கிறாங்கன்னா, ‘பெரியார் பத்தியும் தமிழ் பத்தியும் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க. இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அர்த்த சாஸ்திரம் பத்தி ரிசர்ச் பண்ணுங்'கன்னு நேரடியாக நம்ம ஊருக்கே வந்து சொல்றாங்க. அந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டி ருக்கிறது.

இப்படி பல்கலைக்கழகங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள், பாடத் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். நிதித் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். இப்படி பல தளங்களில் அவர்கள் வேர் விட முயற்சி செய்கிறார்கள். 

(பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் 'சூடு' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)


No comments:

Post a Comment