தினமும் 50 வெளிநாட்டவர்களை வெளியேற்றும் குவைத் அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

தினமும் 50 வெளிநாட்டவர்களை வெளியேற்றும் குவைத் அரசு

குவைத் நகரம், ஜன. 5-  கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியதாவது:-

குவைத்தில் தினமும் 50 பேர், மாதம் 1,518 பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். காலாவதியான இருப்பிட சான்றிதழ்களை உபயோகித்து சட்டவிரோதமாக வசிப்பவர்களே பெரும் பாலும் நாடு கடத்தப்படுகிறார்கள்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியோரும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர் கள், நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை கொண்டவர்களாக கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா: வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த அதிசய இரட்டையர்கள்..!

கலிபோர்னியா, ஜன. 5- பொதுவாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் பிறந்த நேரம் சில நிமிடங்கள் மட்டும் மாறுபடும். ஆனால் அமெரிக்காவில் ஒரு ஆண்டே மாறிப்போன நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இது சாதாரண நிகழ்வு என்றாலும், குழந்தைகள் பிறந்த நேரம் வித்தியாசமாக அமைந்துள்ளது. அதாவது  முதல் குழந்தை டிச.31 2021 இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாகநள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது. இதனால், 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் ஆண்டே மாறிப்போய் உள்ளது.

இந்த அரிதினும் அரிதான நிகழ்வு  என்று கூறப்படு கிறது. இதுகுறித்து பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்து வர் கூறுகையில், 'இது எனது பணிக் காலத்தில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம்' என தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை பெற்றெடுத்த பாத்திமா கூறுகையில், தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.

No comments:

Post a Comment