பல்கலை. வேந்தர் பதவி என்னை நீக்கிவிடுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

பல்கலை. வேந்தர் பதவி என்னை நீக்கிவிடுங்கள்

கேரள அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல்

கொச்சி, ஜன.5  கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

கேரள பல்கலைக்கழ கங்களில் அரசியல் ரீதி யாக நியமனங்கள் நடை பெறுவதாக குற்றம்சாட்டி, முதலமைச்சருக்கு ஆளுநர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் அரசியல் வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று (4.1.2021) கொச்சியில் செய்தியாளர் களுக்கு பதில்அளிக்கும் போது, “இப்பிரச்சி னைக்கு மிகவும் எளிதான தீர்வு உள்ளது. சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை அவர்கள் (அரசு) கூட்டலாம். முத லமைச்சரை பல்கலைக் கழகங்களின் வேந்தராக நியமிக்கலாம். அல்லது இதற்காக ஓர் அவசரச் சட் டத்தை அரசு கொண்டு வரலாம். அவ்வாறு கொண்டு வந்தால் அதில் கையெழுத்திட நான் தயாராக இருக்கிறேன்என்றார்.

அவர் மேலும் கூறும் போது, “நிச்சயமாக ஒரு விஷயம் நடந்தது. அது, வேந்தர் பொறுப்பில் தொடர வேண்டாம் என முடிவு செய்ய வைத்தது. ஆனால் இதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இது தேசிய நிறுவனங்கள் தொடர்பா னது. நான் அதிகாரங் களை கேட்கவில்லை. வேந்தராக பணியாற்று வது சிரமமாக உள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறேன்என்றார்.

No comments:

Post a Comment