* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் * 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* "நீட்" போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றன * மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உதவிகள்
* பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் சிந்தனைகள்
இந்த அரசின் வழித்தடத்தைத் தீர்மானிக்கின்றன
* 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்புற திட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
சென்னை, ஜன.5 சமூக நீதியை உறுதிப்படுத்துவதே திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள், “நீட்” தேர்வு தேவையற்றது, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, அன்புடைமை போன்ற தத்துவங்களை இந்த அரசு கடைப்பிடித்து வருகின்றது.பெரியார் அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடத்தைத் தீர்மானிக்கின்றன என ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்தார்.
இன்று (5.1.2022) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் கூறியிருப்பதாவது:
இம்மாமன்றத்தின் பதினாறாவது சட்டமன்றக் கூட்டத்திற்குஎன் முதல் உரையைநிகழ்த்துவதை பெரும்பேறாகக் கருதுகிறேன். இம்மாமன்றம் நீண்ட நெடிய பாரம்பரியமும், வரலாறும் கொண்டுள்ளது. நீங்கள் அனைவரும் இந்தப் பெருமைமிகு தொடர்ச்சியின் வழித்தோன்றல்கள். உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்து களையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ
முதல் நொடிலியிருந்தே...
* பதவியேற்ற முதல்நொடியிலிருந்தே, ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டு, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலமெங்கும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசிப் பணி களை மக்கள் இயக்கமாக மாற்றி, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையை திறம்படக் கையாண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். மாநிலத்தின் பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிப்படையாமல், கரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய முறை நமது நாட்டிற்கே முன்னோடியாக அமைந்தது.
வருமான உச்சவரம்பு உயர்வு
* முத்தமிழறிஞர்கலைஞர்அவர்களால்அறிமுகப் படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான ஆண்டுவருமானஉச்சவரம்பு 72,000 ரூபாயிலிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், கோவிட்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகப் பெறலாம் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதன்பயனாக, இதுவரை 33,117பேர் 387 கோடிரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.
இன்னுயிர் காப்போம்
* சாலை விபத்துகளால் ஏற்படும் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புகளைக் குறைக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்’ என்ற உன்னதத் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் அளிக்கப்படும் அவசர சிகிச்சைகளுக்கான செலவை அரசே ஏற்கும். இத்திட்டத்தில், முதற்கட்டமாக 609 மருத்துவ மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, விபத்துகளில் சிக்கிய 4,482 பேர்கள் அவசர சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.
வெள்ளத்தடுப்பு
* இனிவரும் காலங்களில்சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு, நீண்டகாலத் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த பரிந்துரைகளை வழங் குவதற்கென ஆலோசனைக்குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நீண்டகால நடவடிக்கைகளை இந்த அரசு செயல்படுத்தும்.
பொங்கல் பரிசு தொகுப்பு
* கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை யாலும், வரலாறு காணாத மழைவெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், 1,297கோடி ரூபாய்செலவில், மாநிலத்திலுள்ள 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 19 மளிகைப் பொருட்களும், கரும்பும் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு அரசால்வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்மொழியைப் போற்றி
* தமிழ்மொழியைப் போற்றி, அதன்செம்மையை நிலைநாட்டுவதில்இந்த அரசு உறுதியாக உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் அவர்கள் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற பாடலைதமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.இப்பாடலை தமிழ்நாட்டின்மாநிலப்பாடலாக (State Song) அதிகாரப்பூர்வமாகஅறிவித்து, இந்த அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, கல்விநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் நடை பெறும் அனைத்துப் பொதுநிகழ்ச்சிகளின்தொடக்கத்தில், தக்க முறைப்படிதமிழ்த்தாய்வாழ்த்துகட்டாயமாகப்பாடப்படவேண்டும். தனியார்அமைப்புகளிலும் இத்தகையநடைமுறையைஊக்குவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
* ‘எங்கும்தமிழ்எதிலும்தமிழ்’திட்டத்தின்மூலம், அரசுஅமைப்புகள், தனியார்பள்ளிகள், கடைகள், வணிகநிறுவனங்கள் எனஅனைத்திலும்தமிழ்மொழியின்பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில்,தமிழ்நாடுஆட்சிமொழிச்சட்டம், 1956-இல் புதியவழிகாட்டிநெறிமுறைகள்வகுக்கப்படும். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கான 100 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
அயலகத் தமிழர் நாளாக
* ஜனவரி 12 ஆம்நாள்‘அயலகத்தமிழர்நாளாக’அரசால்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள தமிழர் நலச்சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், அயலகத் தமிழர்களுக்குதாய்த் தமிழ்நாட்டுடன் உள்ள உறவு வலுப்பெறுவதுடன், தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும் உதவும்.அயலகத்தமிழர்கள், அவர்களதுசொந்தஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்கு உதவுவதற்கு ‘தாய்மண்’திட்டம் வழிவகை செய்யும்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு
* தமிழ்நாட்டில் வசிக்கும்இலங்கைத்தமிழர்களின்நலனைப்பேணிக்காப்பதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது.இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களின்வாழ்விடச் சூழலை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 176 கோடி ரூபாய் செலவில் 3,510 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பயிர் காப்பீடு
* அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் சில பகுதிகளில் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைத் தீர்க்கவும், மறுபயிரிடச் செய்யத் தேவையான இடுபொருட்களை வாங்கவும் ஒரு ஹெக்டேருக்கு6,038 ரூபாய் இழப்பீடு அரசு அறிவித்துள்ளது.மாநில அரசின் தொடர் முயற்சியால் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 25 இலட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர்.இத்திட்டத்தில்37 இலட்சம் ஏக்கர் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி
* அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு காலத்தின் போதுமாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல இயலாததால்,1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக, ‘இல்லம் தேடி கல்வி’என்ற முன்னோடித் திட்டம்சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை மீண்டும்
* இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த 80,000 அலுவலர்களைப் பயன்படுத்தி, GPS செயலி
வாயிலாக முறையாகக் கணக்கெடுத்து 1,73,792 குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமூகநீதிப் பார்வை
* ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் வடிவமைக்கப்படுகிறது என்பதை நமது அரசு நன்கு உணர்ந்துள்ளது. தாய்மொழிப் பற்றும், உலகை வெல்ல உதவும் ஆங்கிலமும் இணைந்த இருமொழிக் கொள்கை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகநீதிப் பார்வை, அறிவியல் வழிச் சிந்தனையும், தொழில்முனையும் திறனும் படைத்த இளைஞர் சமுதாயம், கலை, இலக்கியம், விளையாட்டு என பன்முகத்திறன் கொண்ட வெற்றியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றை முதன்மை இலக்குகளாக முன்வைத்துச் செயலாற்றிட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த உயரிய நோக்கங்களுக்குச் செயல்வடிவம் தந்திடும் வகையில், மாநிலக் கல்வி அமைப்பின் முதுகெலும்பாய்த் திகழும் அரசுப் பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த அய்ந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும்.
1,74,999 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
* தெற்காசியாவிலேயேமுதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாகதமிழ்நாட்டை மாற்றிடஇந்தஅரசுஉறுதியாக உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஏழு மாதங்களில், மூன்றுமுதலீட்டாளர்மாநாடுகளைநடத்தியது. இதன்பயனாக, 56,230கோடிரூபாய்முதலீட்டில் 1,74,999 நபர்களுக்குவேலைவாய்ப்புகளைஉருவாக்கக்கூடிய 109 புரிந்துணர்வுஒப்பந்தங்கள்கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில், இதுவரை 21,508 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்தொடங்கப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் கூடஇத்தகைய பெருமளவு முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது,இந்த அரசின்மீதுதொழில்முனைவோர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குநற்சான்றாக அமைந்துள்ளது.
மருத்துவக் கருவிகள் பூங்கா
* மருத்துவக் கருவிகள் உற்பத்தித்துறை, ஒரு வளர்ந்து வரும் துறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொழிலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக, ஒரகடத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கருவிகள் பூங்கா ஒன்றை அரசு அமைத்து வருகின்றது.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்
* அடிப்படைகட்டமைப்புவசதிகளை வழங்குவதன்மூலம், கிராமங்களின்முழுமையானவளர்ச்சியைஉறுதிசெய்வதற்காக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்த அரசுபுத்துயிர் அளித்துள்ளது. இந்த ஆண்டு 1,997 ஊராட்சிகளில் 1,200 கோடிரூபாய்செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையும், பகுத்தறிவு சிந்தனையையும் ஊக்குவிப்பதற்காக 4,116 கிராமப்புர நூலகங்கள்92கோடிரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. 1997 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம்ஆண்டுவரைகட்டப்பட்ட 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல், படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
* நாட்டில் நகர்ப்புறங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். நகர்ப்புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும்,கட்டமைப்புவசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு தீர்மானித்துள்ளது. சாலைகள், தெருவிளக்குகள், பேருந்துநிலையங்கள், பூங்காக்கள், நீராதார அமைப்புகள்,மின்மயானங்கள்போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த, 1,000 கோடிரூபாய்ஒதுக்கீட்டில்‘கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்’அரசால்செயல்படுத்தப்படுகின்றது.
நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்
* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘நகர்ப்புரவேலைவாய்ப்புத்திட்டம்’அரசால்தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், சமூகப்பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல் பொதுச் சொத்துக்களை உருவாக்கிப் பராமரிக்கவும்
உதவும். இத்திட்டத்தில், இதுவரை, 31,620 நபர்கள் பணிபுரியக் கண்டறியப்பட்டு, 18,526 நபர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதி
* பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்சட்டம், 2012இன் கீழ், நிவாரணம் வழங்கப்பட்ட குழந்தைகளுக்குமறுவாழ்வுஅளிக்கவும்இழப்பீட்டுத்தொகை வழங்கவும், ‘தமிழ்நாடுபாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கானஇழப்பீட்டுநிதி’ என்ற ஒரு சிறப்பு நிதியை அரசுஉருவாக்கியுள்ளது. இதன் மூலம்,இதுவரை 103 குழந்தைகளுக்குஇரண்டு கோடிரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
ரூ.20000 கோடி மதிப்பில் மகளிர்
சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்
* மகளிரின் மேம்பாட்டிற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்,1989 ஆம் ஆண்டில் நாட்டிற்கே முன்னோடியாக தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த விதை இன்று ஆல்போல் தழைத்து, மாபெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இந்த நிதியாண்டில், 4,02,829உறுப்பினர்களைக் கொண்ட 29,425 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தஆண்டு, 20,000 கோடி ரூபாய்க்கு மேலாகசுயஉதவிக்குழுக்களுக்குவங்கிக் கடன்கள் வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.இதுவரை 1,83,096 சுயஉதவிக்குழுக்களுக்குபல்வேறு வங்கிகள் மூலம் 14,872 கோடிரூபாய்கடன்வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள்
* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 58 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்குப் பணிநியமனஆணைகளை இந்த அரசு வழங்கியுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 1,628.61 கோடி ரூபாய் மதிப்பில் 432.82 ஏக்கர் பரப்பளவுஆக்கிரமிப்புநிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ‘ஒருகால பூஜை’ திட்டத்தில் 12,959
கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 1,000 ரூபாயை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில்களிலும், கோயில்களுக்குச்சொந்தமானதிருமணஅரங்குகளிலும்மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனஅரசு உத்தரவிட்டுள்ளது.
'தண்பொருநை'
* அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகமானது 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவியல்ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, நவீன வசதிகளுடன்கூடிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
தொடர்ச்சி 7ஆம் பக்கம் பார்க்க..
அடிப்படை சித்தாந்தம்
* சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளோருக்குசுயமரியாதை, கண்ணியம்மற்றும்சமூகநீதியைஉறுதிப்படுத்துவதேதிராவிடஇயக்கத்தின்அடிப்படை சித்தாந்தம். முதலமைச்சர் அவர்கள் நரிக்குறவர், இருளர் ஆகியோர்குடும்பங்களின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றியது போன்ற செயல்கள்,விளிம்புநிலையில் உள்ளோர் மீது அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட அக்கறையைவெளிப்படுத்துகின்றது.
பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை
* தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உரிமைகளைப் பாது காப்பதற்காக தன்னாட்சிஅதிகாரங்களுடன்,சட்டப்படி அமைக்கப்பெற்ற தமிழ்நாடுஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினருக்கானமாநிலஆணையத்தைஅரசுஉருவாக்கியதன் மூலம், அவர்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு உறுதி
* முதலமைச்சர்அவர்களின்இடையறா முயற்சியின்பயனாக இளநிலை மற்றும் நிறைநிலை மருத்துவப்படிப்புகளில் அகில இந்திய அளவிலான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBCs) 27 சதவீதம் இட ஒதுக்கீடு சாத்தியமானது. இதுபோன்றே, அனைத்து தொழிற் படிப்புகளிலும் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்யத்தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். இவ்வாறு, நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே சமூக நீதிக் கருத்துகளை முன்வைத்து மானுடம் வெல்லும் பாதையில் மற்ற மாநிலங்களை வழிநடத்திச் செல்லும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பொறுப்பை இந்த அரசு நிறைவேற்றும்.
'நீட்' தேர்வு தேவையற்றதே
* கிராமப்புர மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள்தேவையற்றன என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
பகுத்தறிவு, அன்புடைமை
* சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, அன்புடைமை போன்ற தத்துவங்களை இந்த அரசு கடைப்பிடித்து வருகின்றது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய உன்னதமான தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடத்தைத் தீர்மானிக்கின்றன.
* மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமன்றி, தெற்காசிய நாடுகளுக்கேமுன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம் என ஆளுநர் தனது உரையில்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment