புதுடில்லி, ஜன.5 இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக் கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரு கின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற் பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன் னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.
எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என நேற்று (செவ்வாய் கிழமை) தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு ஆளானவர்க ளுக்கு சிகிச்சை அளிப்பதற் காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவி லான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது.
இந்த மாத்திரையை இந் தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.
இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச் சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும்.
இந்த மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100க்கும் மேற் பட்ட நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து, வினியோகம் செய்யும்.
இதேபோன்று, இந்தியா வில் மொத்தம் 13 நிறுவனங் கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும்.
அடுத்த வாரம் இந்தியா முழுவதுமுள்ள மருந்து கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது என்று அந்நிறு வனம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment