ஆசிரியருக்குக் கடிதம் - நூற்றாண்டு விழாகண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாயகர்கள் இருவர் பற்றிய "மலரும் நினைவுகள்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

ஆசிரியருக்குக் கடிதம் - நூற்றாண்டு விழாகண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாயகர்கள் இருவர் பற்றிய "மலரும் நினைவுகள்"

இனமானப் பேராசிரியர் .அன்பழகன் அவர்கள்.

19.12.2021 அன்று சென் னையில் சீர்மிகு நூற்றாண்டு விழா - திராவிட முன்னேற் றக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர்   .அன்பழகன் அவர்கள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களிடம் 75 ஆண்டுகள் நட்பு கொண்டவர். தி.மு. கழகத்திற்கு நெருக்கடி வந்த காலங்களில் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தன்வாழ்நாள் முழுவதும் தி.மு.. வளர்ச்சிக்குப் பாடுபட்ட கொள்கைப் பிடிப்பாளர்.  எம்.ஜி.ஆர்.  1972-இல் .தி.மு..வைக் கண்டபோது பேராசிரியர் அவர்களிடம் "தங்களுக்கு ஒரு அம்பாசிடர் கார் வாங்கித்தருகிறேன் என்னுடன் இயக்கப் பணியாற்ற வாருங்கள்" என அழைப்பு விடுத் தார். அந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளாமல் தன்வாழ்நாள் இறுதிக் காலம் வரை திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் இந்தப் பேராசிரியர்.

கடலூர் கி.கோவிந்தராசன் அவர்கள்.

15.10.1919 அன்று பிறந்த கி.கோவிந்தராசன் அவர்கள் 8.3.2020-இல் கடலூரில் நூற்றாண்டு விழா கண்டவர். திரா விடர் கழகத்தின் தலை வர் மற்றும் எல்லோரா லும் ஆசிரியர் என அழைக்கப்படும் மானமிகு கி.வீரமணி அவர்களின் மூத்த அண்ணன், எங்களின் குடும்ப நண்பர். கழக உடன் பிறப்புகளால் செல்லமாக கி.கோ.என அழைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் கடலூர் நகர செயலாளர். சுயமரியாதை வீரர் மானமிகு கி.கோவிந்தராசன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்த கொள்கை மறவர்.  எம்.ஜி.ஆர். .தி.மு..வைக் கண்டபோது ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட் டச் செயலாளராகப் பணியாற்ற அழைப்பு விடுத் தார். தான் கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்து அந்த அழைப்பை ஏற்க மறுத்ததால் சிதம்பரத்தை சேர்ந்த இரத்தினபாலகுருசாமி அவர்கள் மாவட்டச் செயலாள ராக நியமிக்கப்பட்டார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 48-ஆவது நினைவு நாளாம் 24.12.2021 அன்று. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நூற்றாண்டு விழா கண்ட இரு நாயகர்கள் பற்றிய எனது நினைவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

- .சண்முகசுந்தரம், கடலூர்-3.

(ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)

No comments:

Post a Comment