அறிவுவழி காணொலி இயக்கம் 500ஆவது நிகழ்ச்சி பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

அறிவுவழி காணொலி இயக்கம் 500ஆவது நிகழ்ச்சி பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை

சென்னை, ஜன. 5- அறிவுவழி காணொலி இயக்கத்தின் 500ஆவது நிகழ்ச்சி கடந்த 2.1.2022 ஞாயிற் றுக்கிழமை இரவு 8 மணி யளவில் நடைபெற்றது.

பெண்களால் என்ன சாதிக்க முடியும் என்று கொக்கரிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு மரண அடி கொடுத்து நூறு சதவீதம் பெண்களே நடத்திய வர லாற்று சிறப்பு நிகழ்ச்சி இந் நிகழ்ச்சி. இந்நிகழ்வை மகளிர் அணி மாநில அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி ஒருங்கிணைத்தார். மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை வரவேற் றார். மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் சே.மெ.மதிவதனி தொடக்கவுரையாற்றினார்.

நிகழ்வின் முத்தாய்ப் பாக நூல்கள் (புத்தகங் கள்) திறனாய்வு ஆங்கிலத் தில் மிக சிறப்பாக அதி லும் குறிப்பாக நிகழ்வில் கலந்துகொண்டு சிறப் பித்த கொள்கை உறவுகள் பெருமைக் கொள்ளும் வகையில் திறனாய்வுகள் அமைந்தன.

திருப்பத்தூர் .அகிலா, நீலகிரி அருணா பத்மா சுரன், நல்லினி ஒளிவண் ணன், மதுரை பேராசிரி யர் வெண்ணிலா மகேந் திரன் ஆகியோர் நூல்கள் திறனாய்வு செய்து உரை யாற்றினார்கள்.

திராவிடர் கழக பிரச் சார செயலாளர் வழக்கு ரைஞர் .அருள்மொழி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வின் முடிவில் இயக்கத்தின் இயக்குநர் அண்ணாநகர் பழ.சேர லாதன் உரை ஆற்றினார். முடிவில்  இயக்க ஒருங்கி ணைப்பாளர் அரும்பாக் கம் சா.தாமோதரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment