நாட்டில் பெண் வாக்காளர் எண்ணிக்கை 5.1% உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

நாட்டில் பெண் வாக்காளர் எண்ணிக்கை 5.1% உயர்வு

புதுடில்லி, ஜன. 27-  தேசிய வாக்காளர்தினம் 25/1/2022 அன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தொலைக்காட்சியில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதா வது:

கடந்த 2019இல் மக்க ளவைத் தேர்தலில் வாக்க ளிக்க தகுதியான வாக் காளர் எண்ணிக்கை 91.2 கோடியாக இருந்தது. இது இப்போது 4.3% அதிகரித்து 95.1 கோடி யாகி உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப் பில் ஆண்களை விட பெண்கள் முன்னணியில் உள்ளனர். 2019இல் 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது 5.1% அதிகரித்து 46.1 கோடி யாகி உள்ளது.

அதே நேரம் 3 ஆண்டு களுக்கு முன்பு 47.3 கோடியாக இருந்த ஆண் வாக்காளர் எண்ணிக்கை 3.6% அதிகரித்து 49 கோடியாக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment