சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவுத்துறை அமைச்சர் .பெரியசாமி அறிவிப்பு

சென்னை,ஜன.10 தமிழ்நாடு சட்டப் பேரவையில் 7.1.2022 அன்று கூட்டுறவுத் துறை  அமைச்சர் .பெரியசாமி விதி 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு:

சேலம் மற்றும் நாமக்கல்  மாவட்டங் களில்  பயிர்க் கடன் வழங்குவதற்கு  நிர்ணயிக்கப்பட்ட  குறியீடு முறையே ரூ.746 கோடி மற்றும்  ரூ.534 கோடி. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது ரூ.614.92 மற்றும் ரூ.502.62 கோடி.சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைப் பொறுத்தவரை பெருவாரியாக  சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப் பட்டுவரும் நிலையில்   இப்பயிர்களுக்கு  ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் கடன் தொகை மிகவும் குறைவு என்பதால்,  பயிர்க் கடன் அளவு அதிகமாக உள்ள  மஞ்சள் மற்றும் வாழை போன்ற பயிர்களைக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கல் பெறாமல் கடன் பெறும் விவசாயிகளே சுய உறுதிமொழி அளித்து கடன் பெற்றுள்ளது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது சுய உறுதிமொழியில் கூடுதலான பரப்பில் பயிர் செய்து வருவதாக குறிப் பிட்டுள்ளனர். 

இந்த விவரங்கள் அடங்கலில் உள்ள விவரங்களுக்கு மாறாக உள்ளது. இது போன்ற விதிமீறல்கள் பிற மாவட்டங் களில் நடைபெற்றிருப்பினும், இவ்வகை யான 2 விதி மீறல்களில் 97% அதாவது மொத்தம் ரூ.516.92 கோடியில் ரூ.501.69 கோடி  இவ்விரு   மாவட்டங்களில்  மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 2021 மாதம் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக் கப்பட்டு, சேலம் மற்றும்  நாமக்கல்  மாவட்டங்களில் 1,11,833 விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று  வழங்கப்பட்டு 51,017 நபர்களுக்கு மேற்கூறிய 2 விதிமீறல்களால் தள்ளுபடி சான்று வழங்கப்படாமல் நிலுவை உள்ளதால், விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்க் கடன் வழங்கப்படாத நிலை  ஏற்பட்டது.

விதிமீறல்களுக்குட்பட்ட

இதனைத் தொடர்ந்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்து விவசாயிகள்  முதலமைச்சரை சந்தித்து இது குறித்து முறையிட்டு, தங்களுக்கு நடப்பாண்டில் தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கவும், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது போலவே  தங்களுக்கும் பயிர்க்கடன் தள் ளுபடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பினை தொடர்ந்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் உட்பட இதர மாவட்டங்களிலும் மேற்கண்ட விதி மீறல்களுக் குபட்ட பயிர்க் கடன்களில் பெரும் பான்மையான விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று தேர்தலுக்கு முன்பே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

விதிமீறல்கள் இனி நடைபெறாவண்ணம்..

இந்நிலையில், விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியானது, அதிக முக்கியத் துவம் வாய்ந்த பணியாக உள்ளதாலும், விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது சங்கத்தின் பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்து விவசாயிகளின் நலனை முன் னிறுத்தி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் இந்நிகழ்வினை சிறப்பினமாக கருதி மேற்கூறிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றினை வழங்கலாம் எனவும் அவர் களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கவும் ஆணையிட்டுள்

ளார்.

இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும். அவர்களுக்கு நடப்பாண்டில் மீண்டும் பயிர்க் கடன் வழக்கம் போல தொடர்ந்து வழங்கப்படும்.

இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

No comments:

Post a Comment