முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
சென்னை, ஜன.10 முழு ஊரடங் கால் தமிழ்நாடு முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப் பட்டன. சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.
கரோனா 3ஆவது அலை பரவல் தற்போது மிக தீவிரமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் கரோனா வின் பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது.
முழு ஊரடங்கு
இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று (9.1.2022) முழு ஊர டங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால் தமிழ்நாடு முழு வதும் அத்தியாவசிய சேவை தவிர அனைத்து கடை களும் அடைக்கப்பட்டன. வாகன நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச் சோடின.
சாலைகள் மூடல்
தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு தீவிர மாக அமல்படுத்தப் பட்டது. முழு ஊரடங்கை யொட்டி சென்னையில் நேற்று அனைத்து சாலைகளும் வாகன நட மாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அண்ணா சாலை, திரு வல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, டைடல் பார்க் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ் ணன் சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, அடையாறு எல்.பி. சாலை, ராஜாஜி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்பு கள் கொண்டு அடைக்கப் பட்டன. எப்போதும் பரபரப் பாக காணப்படும் சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் மூடப்பட்டன. மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப் பட்டன.
கடைகள் அடைப்பு
அதேபோல நகரில் கடை களும் முழுமையாக அடைக்கப் பட்டன.
இதனால் தியாகராய நகர், புதுவண்ணை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடியது. மீன் மார்க்கெட்கள், இறைச்சி கடைகள் எனமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. போக்குவரத்து முடக்கப்பட்டதின் காரணமாக பஸ்கள் இயங்கவில்லை. அதே போல கோவில்கள், தேவால யங்கள், மசூதிகள் என வழி பாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், முடிதிருத்த கங்கள், அழகுசாதன நிலை யங்கள், டாஸ்மாக் கடைகள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன.
மருத்துவமனைகள், மருந்த கங்கள், பாலகங்கள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல இயங்கின.
காவல்துறையினர் கண்காணிப்பு
சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலையில் தேவையில்லாமல் சுற்றிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர், சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் (பத்திரிகைகளை காண்பித்து) மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை காவல்துறையினர் அனுமதித்தனர். மேலும் வாகனங்களிலும் காவல்துறையினர் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர் களை அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.
அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான் மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சென்னை யின் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர். இத னால் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் நேற்று வீடு களிலேயே முடங்கினர்.
அத்தியாவசிய தேவை களுக்கு மட்டுமே பொதுமக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. அந்தவகையில் ஊர டங்குக்கு பொதுமக்கள் ஒத்து ழைப்பு வழங்கியதை உணர முடிந்தது.
No comments:
Post a Comment