வீடுகளுக்கு நேரில் சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு உலர் உணவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

வீடுகளுக்கு நேரில் சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு உலர் உணவு

சென்னை, ஜன.10 கரேனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கன்வாடி குழந்தைகளுக்கு இன்று முதல் உலர் உணவுப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்துறை சார்பில் மாவட்ட திட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அங்கன்வாடி மய்யத்தில் முன்பருவக் கல்வி பயில பதிவு செய்துள்ள 2-6 வயது குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு பதில், உலர் உணவாக அரிசி, பருப்பு, முட்டையை அவர்களது வீடுகளுக்கேசென்று வழங்க அங்கன்வாடிபணியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். முதல்கட்டமாக ஜன.10-(இன்று) முதல் 20ஆம் தேதி வரை உலர் உணவு வழங்கப்படும்.

6 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 11-14 வயது பள்ளி செல்லா வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கும் சத்துமாவையும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும். 1-2 வயது குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் வழங்கப்படும் முட்டையையும் நேரில் சென்று வழங்கவேண்டும். இப்பணியின்போதுபணியாளர்கள் அனைவரும் அரசுவெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனாவால் 12,895 பேர் பாதிப்பு

சென்னையில் மட்டும் 6,186 பேருக்குத் தொற்று

சென்னை, ஜன.10 தமிழ்நாட்டில் நேற்று 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28,00,286. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,88,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,12,096.

நேற்று (9.1.2022)  வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 76,58,488 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 6,186 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 6,709 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 252 தனியார் ஆய்வகங்கள் என 321 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து நேற்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,335.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,85,27,532.

* நேற்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,48,308.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 28,00,286.

* நேற்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 12,895.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,186.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 25,798.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,34,691 பேர். பெண்கள் 11,65,557 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 7,558 பேர். பெண்கள் 5,337 பேர்.

* குணமடைந்தவர்கள் 1,808 பேர் - மொத்தம்  27,12,096 பேர்.

*  கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,855 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8,676பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நேற்று உயிரிழந்தவர்களில் 12 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாருமில்லை.

மாநிலம் முழுவதும் 40,318 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24,506 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9,656 அய்சியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

No comments:

Post a Comment