சென்னை, ஜன. 6- தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களில், 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; இதன் வாயிலாக, 1.65 லட்சம் நபர்க ளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என, தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9.84 சதவீதம் பங்களிப்பை வழங்கும், இரண்டாவது பெரிய பொரு ளாதாரம் உடைய மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது.வரும் 2030க்குள், 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், தமிழ்நாட்டில் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து, தொழில்துறை அதி காரிகள் கூறியதாவது:தமிழகத்தில், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங் களில், 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உற்பத்தி நிறுவனங்களுடன் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயி லாக, 55 கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; 1.65 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.இதில், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியை துவங்கும் நிலையில் தங்களது பணி களை விரைவாக செய்து வருகின்றன.
பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு அனுமதி கேட்டு விண் ணப்பித்து உள்ளன. மேலும், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிலம் வாங்கு வதற்கான பணிகளில் ஈடுபட்டு உள் ளன. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்கு ஏதுவான நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கொள்ளப்பட்ட, 100 ஒப்பந் தங்களில், 50 நிறுவனங்கள், தொழிற் சாலைகளை அமைப்பதற்கான முதற் கட்ட பணிகளை, துவக்கி உள்ளன. கரோனா காலத்திலும், தமிழகத்தில் 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு களை ஈர்த்து, தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment