டெஹ்ரான், ஜன. 6- 2020ஆ-ம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி ஈரான் தலை நகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி பறக்கத் தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.
ஜனவரி 3ஆம் தேதி (2020) தங் கள் ராணுவ தளபதி காசிம் சுலை மானி அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெ ரிக்கா எந்த நேரமும் பதிலடி தர லாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த ஈரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் ஏவுகணை என்று தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்த ஈரான் பின் னர் தனது தவறை ஒப்புக்கொண் டது. விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதில் உயிரிழந்த பயணிகளில் பெரும்பாலானோர் கனடாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்த வகையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் உயிரி ழந்த கனடாவை சேர்ந்த 6 பேரின் குடும்பத்தினர் கனடாவின் ஒண் டாரியோ மாகாண நீதிமன்றத்தில் ஈரான் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் 2 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன் றம் 3.1.2022 அன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி பாதிக்கப்பட்ட 6 குடும் பங்களுக்கு ஈரான் அரசு மொத்த மாக 107 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.797 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறி நீதிபதி தீர்ப் பளித்தார்.
No comments:
Post a Comment