வாசிங்டன், டிச. 6- சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 221 நாடு கள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவ தும் கரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 80 லட்சத்து 37 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 67 லட் சத்து 48 ஆயிரத்து 715 பேர் குணம டைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 லட்சத்து 81 ஆயிரத்து 550 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment