உ.பி. உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. தோற்பது உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. தோற்பது உறுதி

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேட்டி

சென்னை,ஜன.10-   உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்பது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்   கூறியதாவது: இந்திய அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நெறி முறைகள், கூட்டாட்சித் தத்துவத்தை தகர்க்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கிறது. அதிகாரங்களை மத்தியில் குவித்து மாநில மக்களின் உணர்வுகளுக்கு மாறாக செயல்படுகிறது.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, கல்வியை வணிகமயமாக்குவதோடு, கல்வியில் இதுவரை மாநிலங் களுக்கு இருந்த உரிமைகளைபறிக்கிறது. நாட்டின் சொத்தானபொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயாக்குவது தேசவிரோதசெயலாகும். தனியார்மயாக்கும்போது மாநில அரசுகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மோடிஅரசு செயல்படுவது, நீட் தேர்வில்இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும்வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது, நீட் தேர்வு தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா சந்திக்க மறுப்பது ஆகியவை கண்டனத்துக்கு உரியது.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மோடி அரசு அகற்றப்பட வேண்டும். அதற்கு, மதச்சார் பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

பாஜகவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கிவிட்டனர். விரைவில் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களில் பா... தோல்வி அடைவது உறுதி.

பஞ்சாபில் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு பஞ்சாப் மாநில அரசை குறைகூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment