சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென்பகுதி அலுவலகம் தமிழ்க் கல்வெட்டுகள் அலுவலகம் என மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென்பகுதி அலுவலகம் தமிழ்க் கல்வெட்டுகள் அலுவலகம் என மாற்றம்

புதுடில்லி, ஜன.10- ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்அய்.யின் கல்வெட்டியல் பிரிவு மைசூரில் இயங்குகிறது. இதில், நாடு முழுவதும் கிடைக்கும் கல்வெட்டுகளை படித்துஆண்டுதோறும் தொகுப்பு கள் வெளியிடப்படுகின்றன. இங்கு அதிக எண்ணிக்கையில் தமிழ் கல்வெட்டுகளின் நகல்கள் (மைப்படிகள்) வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட இந்த தமிழ் கல்வெட்டுகளின் படிகள் இன்னும் முழுமையாகப் படித்து பதிப்பிக்கப்படவில்லை.

இவற்றில் கவனம் செலுத்தாமல் தமிழை உள்நோக்கத்துடன் புறக் கணிப்பதாகவும் ஏஎஸ்அய் மைசூர் அலுவலகம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், தமிழ் ஆர்வலர்களை சந்தித்து மூத்த வழக்குரைஞர் காந்தி பாலசுப்பிர மணியன் சென்னையில் ஆலோசித் தார். அதன் அடிப் படையில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் மணிமாறன் பெய ரால் பொதுநல வழக்கு தொடுக்கப் பட்டது.

திமுக மாநிலங்களவை உறுப் பினரும் மூத்த வழக்குரைஞருமான என்.ஆர்.இளங்கோ வாதிட்ட வழக்கில்,  காந்தி பாலசுப்பிரமணியன்இந்து தமிழ்செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்களை தொகுத்தளித் திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், டில்லியில் உள்ள ஏஎஸ்அய் தலைமை அலுவலகத் தின் துணை இயக்குநர் எம்.ஜெனா வெளியிட்ட உத்தரவில், ‘‘தற்போது சென்னையில் உள்ள இந்திய தொல் லியல் துறையின் தென்பகுதி துணை கண்காணிப்பாளர் அலுவலகம், ‘தமிழ் கல்வெட்டுகளின் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்என மாற்றப்படுகிறது. மைசூரில் இருக்கும் கல்வெட்டுகள் பிரிவின் தமிழ் கல்வெட்டு மைப்படிகளையும் அதன் தொடர்புடைய தமிழ் ஆவ ணங்களையும் சென்னை அலுவல கத்துக்கு அனுப்பி வைக்கவும் ஏஎஸ் அய்.யின் தென் பகுதி கண்காணிப் பாளருக்கு உத்தரவிடப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்சமீபகாலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் தமிழ் கல்வெட்டு களை பதிப்பிக்கும் பணி பாதிப்புஎன்ற தலைப்பில் ஆகஸ்ட் 19 ‘இந்து தமிழ்நாளிதழில் வெளியான செய்தியும் சேர்க்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த செய்தியையும் கவனத் தில் எடுத்துக் கொண்டது.

இதையடுத்து, தமிழ் கல் வெட்டுகள் அலுவலகத்தில் கல் வெட்டியலாளர்கள் பணியிடங் களில் குறைந்தது 100 பேராவது நியமிக்கப்பட வேண்டும்என்று தீர்ப்பில் நீதிபதிகள் உத்தர விட்டுள் ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment