எஸ்.பி.அய்.,யில் பணப் பரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

எஸ்.பி.அய்.,யில் பணப் பரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லை

புதுடில்லி, ஜன. 7- அடுத்த மாதம் முதல், உடனடி பணப் பரிவர்த்தனை சேவையான அய்.எம்.பி.எஸ்., வாயி லாக, 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை அனுப்புவதற்கு கட்ட ணம் எதுவும் கிடையாது என எஸ்.பி.அய்., அறிவித்து உள்ளது.

தற்போது 2 லட்சம் ரூபாய் வரை, அய்.எம்.பி.எஸ்., சேவை வாயிலாக கட்டணம் எதுவும்இன்றி பணம் அனுப்பலாம்.

இந்நிலையில் வாடிக்கையாளர் களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை ஊக்குவிக்கும் விதமாக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப கட்டணம் எதுவும் அடுத்த மாதம் முதல் வசூலிக்கப்பட மாட் டாது என வங்கி தெரிவித்துள்ளது.

‘இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ’ போன்ற எதிலிருந்து பணம் அனுப் பினாலும் கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.

அதேசமயம், யாராவது வங்கி கிளைகளுக்கு சென்று, அங்கிருந்து அய்.எம்.பி.எஸ்., வாயிலாக பணம் அனுப்பும்பட்சத்தில் 1,000 ரூபாய் வரை கட்டணம் எதுவும் வசூலிக் கப்படாது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2 லட்சம் ரூபாய் வரை அவ் வாறு அனுப்புவதென்றால், அதற்கு 2 ரூபாயிலிருந்து 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணமாக பிப்ர வரி 1ஆம் தேதியிலிருந்து வசூலிக்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தி அய்.எம். பி.எஸ்., வாயிலாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்புவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் எஸ்.பி.அய்., அறிவித்து உள்ளது.

என்.இ.எப்.டி., வாயிலாக மேற் கொள்ளப்படும் பணப் பரிவர்த் தனைகளுக்கும் கட்டணம் கிடை யாது. இதுவே வங்கி கிளைகள் வாயிலாக செய்யப்படும்போது, 2–20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment