அணு ஆயுதக் கப்பலுக்கு கேப்டனாக பெண் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

அணு ஆயுதக் கப்பலுக்கு கேப்டனாக பெண் நியமனம்

சான் டியாகோ, ஜன. 7- அமெ ரிக்க கடற்படை வரலாற் றில் முதல்முறையாக, அந் நாட்டின் அணு ஆயுதம் தாங்கி கப்பலான, யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கனுக்கு, பெண் ஒரு வர் கேப்டனாக நியமிக் கப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படை யில், 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் செவிலியர் கள் பணிக்கு பெண்கள் சேர அனுமதிக்கப்பட்ட னர். இரண்டாம் உலகப் போரின் போது, ராணு வத்தில் பெண்கள் சேவை யாற்றுவது அதிகரித்தது. கடற்படைக்கு சொந்த மான விமானங்களை 1974 முதல் பெண்கள் இயக்கத் துவங்கினர். போர் கப்பல்களை 1994 முதல் பெண்கள் இயக்கத் துவங்கினர்.அமெரிக்க கடற்படை வரலாற்றில், அணு ஆயுதம் தாங்கி போர் கப்பல்களுக்கு பெண்கள் தலைமை வகித்தது இல்லை. இந்த சாதனை தற்போது முறிய டிக்கப்பட்டுஉள்ளது.

யு.எஸ்.எஸ்., ஆபிர ஹாம் லிங்கன் என்ற அணு ஆயுதம் தாங்கி போர் கப்பலுக்கு, ஏமி பார்ன்ஷிமிட் என்ற பெண் கேப் டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment