எரிபொருள் விலை உயர்வால் வன்முறை கஜகஸ்தான் அரசு பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

எரிபொருள் விலை உயர்வால் வன்முறை கஜகஸ்தான் அரசு பதவி விலகல்

நூர்-சுல்தான், ஜன. 7- எண் ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ் தானில்கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக் கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன் படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கஜ கஸ்தான் அரசு இந்த எரி பொருள்மீதான விலையை அண்மையில் உயர்த்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, எரிபொருள் விலை உயர்வை கண் டித்து அங்கு போராட் டம் வெடித்தது.

இந்த சூழலில் கஜ கஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியி லும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் இந்த போராட்டம் வன்முறை யாக மாறியது. அல் மாட்டி நகரில் மேயரின் அலுவலகத்தை போராட் டக்காரர்கள் சூறையாடினர்.

இதை தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய தால் இரு தரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அங்கு தொடர்ந்து அசா தாரண சூழல் நீடிக்கிறது.

இந்தநிலையில் அந்த நாட்டின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலை பிரகடனப் படுத் தப்படுவதாக அறிவித் தார். அதோடு திரவமாக் கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாகவும் அவர் அறிவித்தார். ஆனாலும் அங்கு போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரண மாக கஜகஸ்தான் பிரத மர் அஸ்கர் மாமின் தலை மையிலான அரசு பதவி விலகியது. அரசின் ராஜி னாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர் காசிம், துணைப் பிரதமர் அலி கான் ஸ்மைலோவ் தலை மையில் இடைக்கால அரசை அமைக்க உத்தர விட்டார்.

No comments:

Post a Comment