தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்: வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்: வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜன.7  இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ஜனவரி 5ஆம்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்கள் விவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணை யர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1.1.2022-அய் தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிழற்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத் தின்படி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட சிறப்பு சுருக்க காலத்தின் போது வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 36 ஆயிரத்து 917 விண்ணப் பங்கள் பெறப்பட்டு அதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 456 வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 759 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரத்து 250 பேரும், 3ஆம் பாலினத்தவர் 7,804 பேர் உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 7 லட்சத்து 11 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3,56,239, பெண்கள் 3,55,394, 3ஆம் பாலி னத்தவர் 122 பேர் உள்ளனர்.

குறைந்த அளவு வாக்கா ளர்கள் கொண்ட தொகுதி யாக நாகப்பட்டினம் மாவட் டத்துக்கு உட்பட்ட கீழ் வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் மொத்த வாக்காளர்கள் 1,78,517 பேர் உள்ளனர். ஆண்கள் 86,893, பெண்கள் 91,613, 3ஆம் பாலி னத்தவர் 11 பேர் உள்ளனர்.

இதற்கு அடுத்ததாக 2ஆம் இடத்தில் சென்னை  துறைமுகம் தொகுதி உள்ளது. இதுவரையில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 888 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட் டுள்ளனர்.

18-19 வயதுள்ள 4 லட்சத்து 32 ஆயிரத்து 600 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல்களை தலைமை தேர்தல் அதி காரியின் வலைதளத்தில் காணலாம். அதில் தங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2022 அன்று 18 வயது நிரம்பிய தகுதி உள்ள நபர்கள் வாக்காளர் பட்டி யலில் சேர்க்கப்படாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மாவட்ட தொடர்பு மய்யங்கள் ஏற் படுத்தப்பட்டுள்ளன.

1950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் தொடர்பு  கொள்ளலாம். பொதுமக்கள் இந்த மய்யங்களை தொடர்புகொண்டு தேர்தல் தொடர் பான தகவல்களை அறியலாம். தலைமை தேர்தல் அதி காரியின் அலுவலகத்தில் 1800-42521950 என்ற கட்டண

மில்லா தொலைபேசி எண்ணு டன் மாநில தொடர்பு மய்யம் இயங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment