சென்னை, ஜன.7 தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களின் படி கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 6.1.2022 முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதாவது, அனைத்து முனையங்களில் இருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணிக்கு முனையத்தை வந்தடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment