தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடில்லி, ஜன.3  தமிழ்நாட்டை தவிர்த்து விட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள் ளாகின. இதனையடுத்து சேதங் களைப் பார்வையிட ஒன்றிய அரசு தமிழ் நாட்டுக்கு குழு ஒன்றை அனுப்பி வைத்தது. இதற் கிடையே, முதலமைச்சர் மு.. ஸ்டாலினும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து நேரில் பார்வையிட்டார்.

 கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.. நாடா ளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் சந் தித்தார். அதில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண் டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 'ட்வுதே' புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 1,133.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 'யாஸ்' புயல் பாதிப்பிற்கு உள்ளான மேற்கு வங் கத்திற்கு 586.59 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. இவை தவிர தென்மேற்கு பருவ மழையில் பாதிப்பு அடைந்த அசாம் மாநிலத்திற்கு 51.53 கோடி ரூபாய், கருநாடகா மாநிலத்திற்கு 504.06 கோடி ரூபாய், மத்தியப் பிரதேசத்திற்கு 600.50 கோடி ரூபாயும், உத்தராகண்டிற்கு 187.18 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைப் பற்றி இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை . மேலும் தற்போது வரை முதற்கட்டமாகவும் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

 

No comments:

Post a Comment