சென்னை, ஜன.29 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் உற்சாகமாக மருத் துவ படிப்பு இடங்களை மாண வர்கள் தேர்வு செய்தனர். இதன் மூலம் எந்த செலவும்இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் மருத்து வர்கள் ஆக போகிறார்கள்.
மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அதன் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களும் சேர வேண் டும் என்ற நோக்கில், கடந்த ஆண்டு அவர்களுக்கென்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் கடந்த ஆண்டில் 436 அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கு மருத்துவம், பல் மருத்துவ இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டு புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரி களும், 3 சுயநிதி மருத்துவ கல்லூரி களும், 1 சுயநிதி பி.டி.எஸ். கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங் கள் சற்று அதிகரித்திருக்கின்றன.
அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல் லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 437 எம்.பி.பி.எஸ். இடங்களும், 107 பி.டி.எஸ். இடங் களும் என மொத்தம் 544 இடங்களை இந்த ஆண்டு அரசு பள்ளி மாண வர்கள் அலங்கரிக்க இருக்கின்றனர்.
10 இடங்களை பிடித்த மாணவர்கள்
இந்த இடங்களுக்கான கலந்தாய் வில் பங்கேற்க விண்ணப்பித்தி ருந்தவர்களில் ஆயிரத்து 806 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட் டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் 1 முதல் 719 வரையிலான தரவரிசையில் இருந்த மாணவ-மாணவிகள் நேற்று (28.1.2022) கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவ கல் லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் கலந்தாய்வு தொடங்கியது.
தரவரிசையில் முதல் 10 இடங் களை பிடித்த மாணவர்கள் முதலில் அழைக்கப்பட்டனர். அதன்படி, முறையே சிவா (அறந்தாங்கி), பிரகாஷ்ராஜ் (திருவண்ணாமலை), சி.சந்தானம் (தர்மபுரி), வெங் கடேஸ்வரி (சேலம்), எஸ்.குமார் (தர்மபுரி), கவிபிரியா (செய்யாறு), தமிழ்பிரியா (செங்கம்), புவனேஸ்வரி (நாகை), ராகுல் (கடலூர்), கலை யரசன் (சேலம்) ஆகியோர் இடங் களை தேர்வு செய்தனர்.
இதில் வெங்கடேஸ்வரியை தவிர, மற்ற அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியில் பொது மருத் துவப் படிப்புக்கான இடங்களை தேர்வு செய்திருந்தனர். வெங்க டேஸ்வரி மட்டும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தேர்வு செய்தார். தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்து மருத்துவ படிப்பை தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இடஒதுக் கீட்டு ஆணையை வழங்கினார்.
நல்வாய்ப்பு
தரவரிசையில் முதல் 10 இடங் களை பிடித்து, மருத்துவ படிப்பை தேர்வு செய்தவர்களின் பின்புலம், வசதி வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். பிரகாஷ்ராஜ், தமிழ்பிரியா, சி.சந்தானம், புவனேஸ்வரி ஆகியோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வெங்கடேஸ்வரி, கலையரசனின் பெற்றோர் தறித்தொழில் செய் கின் றனர். எஸ்.குமார், ராகுலின் பெற் றோர் கூலித்தொழிலாளி களாகவும், கவிபிரியாவின் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்று பவராக வும் இருக்கின்றனர்.
முதல் இடத்தை பிடித்திருந்த சிவாவின் தந்தை ஆட்டு தோல் வியாபாரம் செய்கிறார். அவர் தன் னுடையமகனுக்கு மருத்துவ படிப் பில் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி யாக காணப்பட்டார். மிகவும் கஷ்டப்பட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இடம் பெற்றதை நினைக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது என்று அவர் நெகிழ்வாக கூறினார். இதேபோல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பெரும்பாலா னோரின் பெற்றோர் கூலித் தொழி லாளிகளாகவும், அன் றாட வயிற் றுப்பாட்டுக்கு ஓடி ஓடி உழைக்கும் அடித்தட்டு வர்க்கமாகவும் தான் இருந்தனர்.
No comments:
Post a Comment