இ...துதான் இ...ந்தியா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

இ...துதான் இ...ந்தியா!

 மோடி தலைமையிலான பா... அரசின் சாதனை களைத் தூக்கி நிறுத்துகிறாரே - ஆளுநர் - உண்மை யில் உலக நிலையில் இந்தியாவின் நிலை என்ன?

இதோ:

உலக அளவிலான பட்டினிக் குறியீட்டில் 94 ஆவது இடத்தில் இருந்து 101 ஆவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இணைந்து பட்டினி தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் வெளியாகியுள்ளது. 116 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 101 ஆவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 94 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத் தக்கது. பாகிஸ்தான் (92), வங்கதேசம் (76), நேபாளம் (76), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன

பன்னாட்டு நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் நடப்பு ஆண்டில் இந்தியா வின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபர் வருவாயில், அண்டை நாடான பங்களாதேஷ் இந்தி யாவை  முந்திவிட்டதாக தெரிவித்துள்ளது

2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தனி நபர் வருமானம்10.3 சதவீதம் குறைந்து, 1,877 டாலராக குறையும் என்றும், இதே காலகட்டத்தில் பங்களா தேஷின் தனி நபர் வருமானம் 4 சதவீதம் அதிகரித்து, 1,888 டாலராக அதிகரித்துள்ளதாகவும் அய்எம்எஃப் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்

1. இந்தியா  2.ஆஃப்கானிஸ்தான் 3.சிரியா 4.சோமாலியா 5.சவூதி அரேபியா 6.பாகிஸ்தான்

7.காங்கோ குடியரசு 8.ஏமன் 9.நைஜீரியா 10.அமெரிக்கா

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், பாலியல் வன்முறை, பெண் கொத்தடிமை மற்றும் நீதி நிராகரிக்கப்படுவது போன்ற காரணங் களுக்காக பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

இந்தியாவில் அமைதியான வாழ்க்கை கிடையாது- யுனெஸ்கோ

உலகில் அமைதியான வாழ்க்கை வாழும் மக்கள் குறித்த கணக்கெடுப்பில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித் துள்ளது

யுனெஸ்கோ அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இதுவரை இருந்துவந்த நார்வே இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது, அதே நேரத்தில் இரண்டாமிடத்தில் இருந்துவந்த பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 156 நாடுகளில் நடந்த இந்த ஆய்வில் பின் லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், அய்ஸ் லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் அய்ந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18 ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தி யாவுக்கு 133 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தியா விற்கு கடந்த ஆண்டு 122 ஆவது இடம் கிடைத் திருந்தது.

2021 ஜூலை மாதம் இந்தியாவின் வேலைவாய்ப்பு இல்லாதோர் அளவு 7 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அதிகரித்து வந்த கரோனா தொற்றுக் காரணமாக 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது

இதன் மூலம் 2021 ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தி யாவில் சுமார் 19 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment