லண்டன், ஜன. 5- தென்ஆப்பி ரிக்காவில் கண்டறியப் பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரானில் இருந்து பாதுகாத்து கொள்வதற் காக, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இந்தியாவி லும் தொடங்குகிறது.
இந்தநிலையில், பூஸ் டர் தடுப்பூசி, ஒமைக்ரா னுக்கு எதிராக எவ்விதம் செயல்படும் என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வுகள் நடத்தப்பட் டன. அவற்றின் முடிவு களை இங்கிலாந்து சுகா தார பாதுகாப்பு அமைப்பு தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2 டோஸ் போட்டவர் களை விட பூஸ்டர் தடுப் பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரானுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு கிடைக் கிறது. 2ஆ-வது டோஸ் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன் பாதுகாப்பு திறன் 52 சதவீதமாக குறைகிறது.
ஆனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டவுடன் அதன் பாதுகாப்பு திறன் 88 சதவீதமாக அதிகரிக் கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமைக்ரா னுக்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப்படும் ஆபத்தும் குறைகிறது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கிறது.
இங்கிலாந்தில் நடத் தப்பட்ட 2 ஆய்வுகளும் 2 டோஸ் போட்டவர் களை விட பூஸ்டர் தடுப் பூசி போட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனும திக்கப்படுவதற்கான ஆபத்து கணிசமாக குறை வாக இருப்பதை காட்டு கின்றன.
டெல்டாவுடன் ஒப் பிடுகையில் ஒமைக்ரானுக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment