ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ள அய்.ஏ.எஸ். விதிகள் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதென 9 மாநிலங்கள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ள அய்.ஏ.எஸ். விதிகள் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதென 9 மாநிலங்கள் எதிர்ப்பு

புதுடில்லி, ஜன.27 ஒன்றிய அரசின் அய்..எஸ். விதிகள் திருத்தத்துக்கு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் 9 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

அய்..எஸ். அதிகாரிகளுக்கு மாநிலம் அல்லது மாநிலங்கள், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் பிரிவு (கேடர்) ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒன்றிய அரசு பணிக்கு செல்லவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எனவே அய்..எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிகளுக்கு மாநிலங்கள் அனுப்பி வைக்க வேண்டியதும் முக்கியம் ஆகும். இவ்வாறு ஒன்றிய அரசு பணிக்கு அனுப்பி வைக்கப்படும் அதிகாரிகளுக்கு அனுபவமும் அதிகரிக்கிறது.

ஆனால் சமீப காலமாக ஒன்றிய அரசு பணிக்கு அய்..எஸ். அதிகாரிகள் அதிகம் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் ஒன்றிய அரசு துறைகளில் இணை செயலாளர் மட்டத்திலேயே அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் 309 அதிகாரிகள் ஒன்றிய அரசு பணிக்காக நியமிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது அது 223 ஆக குறைந்திருக்கிறது. இதனால் ஒன்றிய அரசு துறைகளில் பணிகளில் தேக்க நிலை காணப் படுகிறது.

பரிந்துரை கடிதம்

எனவே அய்..எஸ். அதிகாரிகளை தேவைப்படும்போது தானாகவே எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கும் வகையில் அய்..எஸ். (கேடர்) விதிகள் 1954 இல் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது.

இதற்கு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. குறிப்பாக ஒன்றிய அரசின் இந்த முடிவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என போர்க்கொடி தூக்கியுள்ளன.

எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த மாநிலங்களின் பட்டியலில் கடைசியாக ஒடிசா இணைந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த பரிந்துரை செயல் வடிவம் பெற்றால் மாநிலங்களின் நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடும் பாதிக்கும் என அந்த மாநில அரசு கூறியுள்ளது.

முன்னதாக மராட்டியம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், தெலங்கானா, சத்தீஸ்கார், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் ஒன்றிய அரசின் இந்த பரிந்துரையை எதிர்த்து இருந்தன.

இந்த முடிவு கொடூரமானது என வர்ணித் திருந்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இது ஒருதலைபட்சத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறியிருந்தார்.

நாட்டின் கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியின் அடிப்படையிலேயே பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முடிவை கைவிடுமாறு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த திருத்தத்துக்கு எதிராக முதலில் குரல் எழுப்பிய மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா, இந்த திருத்தமானது அதிகாரிகள் மத்தியில் ஒரு அச்ச மனநிலையை உருவாக்கி, அவர்களின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், இதை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment