கருப்பைக் கண்டு மிரளுவோருக்குக் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

கருப்பைக் கண்டு மிரளுவோருக்குக் கண்டனம்!

புதுச்சேரியில் நேற்று (26.1.2022) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளர் தோழர் கபேரியல், வழக்கமாக அவர் அணியும் கருப்புத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு சென்றபொழுது, அந்தத் துண்டை அகற்றும்படி காவல்துறையினர் கூறியது வன்மையான கண்டனத்திற்குரியது.

சட்டப்படி அவருக்குள்ள தனி மனித உரிமையைப் பறிப்பதும் ஆகும். காவி அணிந்து செல்ல உரிமை இருக்கும்போது, கருப்புத் துண்டு அணிந்து செல்வது எப்படி தவறு? எவ்வகையில் சட்ட விரோதம்?

கருப்பு துக்கத்தின் அறிகுறி என்ற பதிலை எவராவது சொன்னால், அவர்களைக் கேட்கிறோம், கருப்புடை தரித்துத்தானே நீதிபதிகள் நீதி வழங்குகிறார்கள், அது தவறா?

நீதிபதிகள் கருப்பு 'சூட்'டில் வந்தால், தடுப்பார்களா?

வெள்ளைத் தலைமுடியைக்கூட 'டை' அடித்து கருப்பு ஆக்கியவர்களை, கருப்பாக உள்ளது என்று தடுப்பார்களா?

மழை பெய்யும் என்று எதிர்பார்த்து, கருப்புக் குடையை எடுத்துச் சென்றால், அனுமதிக்க மறுப்பார்களா?

மிகுந்த வேதனையாகவும், வெட்கமாகவும் உள்ளது!

தொடர்ந்து கருப்புடையுடன் புதுவைத் தலைமைச் செயலகத்திற்குச் செல் வதையோ, மகளிர் கருப்புச் சேலை உடுத்திச் செல்வதையோ எந்த சட்டவிதியின்கீழ் தடுக்க முடியும் என்று கேள்வி எழுந்தால், பதில் அளிக்க முடியுமா?

புதுவை காவல்துறையினரின் செயல் கண்டனத்திற்குரியது!

.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கண்டனத்திற்கு திராவிடர் கழகத்தின் ஆதரவு உண்டு!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.1.2022

No comments:

Post a Comment