கருப்புத்துண்டு திராவிட இயக்கத்தின் அடையாளம் - குடியரசு நாள் விழாவில் கருப்புத் துண்டு அணிந்து சென்ற புதுச்சேரி ம.தி.மு.க. அமைப்பாளருக்கு அனுமதி மறுப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

கருப்புத்துண்டு திராவிட இயக்கத்தின் அடையாளம் - குடியரசு நாள் விழாவில் கருப்புத் துண்டு அணிந்து சென்ற புதுச்சேரி ம.தி.மு.க. அமைப்பாளருக்கு அனுமதி மறுப்பதா?

வைகோ எம்.பி., கண்டனம்

சென்னை,ஜன.27 புதுச்சேரியில் நேற்று (26.1.2022) நடந்த குடியரசு நாள் விழா வில் பங்கேற்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளர் கபேரியல், புதுச்சேரி அரசின் அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். விழா நடைபெற்ற இடத் தின் நுழைவு வாயிலில் இருந்த காவல் துறையினர், கபேரியல் அணிந்திருந்த கருப்புத்துண்டை அகற்றி விட்டுத்தான் செல்லவேண்டும் என்று அவரை தடுத் துள்ளனர்.

கருப்புத்துண்டு என்பது திராவிட இயக்கத்தின் அடையாளம்; திராவிட இனத்தின் இன இழிவைத் துடைப்ப தற்காக களத்தில் நின்று போராடிய அறிவாசான் தந்தை பெரியார் கருப்பு சட்டை அணிவதையே திராவிட இயக்கத் தொண்டர்களுக்கு பெரு மிதமாக வழிகாட்டி உள்ளார். பெரியா ரின் தொண்டரும், .தி.மு.. மாநில அமைப்பாளருமான கபேரியல், கருப்புத் துண்டை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை அடாவடி யாகக் கூறியபோது, "கருப்புத் துண்டு அணிந்ததால் விழாவுக்கு அனுமதிக்க வில்லை என்று எழுதித் தாருங்கள்என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டு, போராட்டம் நடத்த அவர் முனைந்த பிறகுதான் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி காவல் துறையினரின் அத்துமீறலை வன்மையாகக் கண்டிப் பதுடன், புதுச்சேரி அரசு எல்லை மீறி நடந்த காவல்துறையினர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment