புதுடில்லி,ஜன.5 ஏடிஎம் மய் யங்களில் மேற்கொள்ளப்படும் பரி வர்த்தனைக் கட்டணத்தை ஒன்றிய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டண உயர்வு ஜன.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, வங்கிகளின் இதர பரிவர்த்தனைக் கட்டணத்தையும் விரைவில் உயர்த்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தற்போது அதே வங்கியின் ஏடிஎம் மூலமாக மாதம் 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களின் மூலம் 3 முறையும் கட்டணமின்றி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதற்குமேல் செல்லும் பட்சத்தில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்ட ணம் ரூ.20-லிருந்து ரூ.21 ஆக உயர்த் தப்பட்டுள்ளது. இது ஜன.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே, வங்கிப் பரிவர்த் தனைக் கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி உயர்த்த உள்ளது. இதன்படி, வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.17 ஆகவும், பிற சேவை களுக்கான கட்டணங்கள் ரூ.5-லிருந்து ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது.
ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், நிச்சயமாக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் இக்கட்டண உயர்வை சமாளிக்க சிலவழிகளைப் பின்பற்றலாம். அதன்படி, ஒரு மாதத்துக்கு எவ் வளவு தொகை செலவாகும் என் பதை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்ப பணத்தை எடுக்க வேண்டும். இதன்மூலம், ஏடிஎம் களில் அடிக்கடிபணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
அதேபோல், தங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய, அடிக்கடி ஏடிஎம் மய்யத்துக்குச் சென்று ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பண இருப்பை (பேலன்ஸ்) பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், ஒரு மாதத்துக்கு வழங் கப்பட்டுள்ள 8 இலவச பரிவர்த்தனை களுக்குள், ஒரு மாதத்துக்குத் தேவை யான நிதித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிட வேண்டும்.
இன்றைக்கு சாலையோர வியா பாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்களில் கடை வைத்திருப் பவர்கள் வரை அனைவரிடமும் கூகுள் பே, பேடிஎம் வசதிகள் உள் ளன. எனவே, இவற்றைப் பயன் படுத்தி பணப் பரிவர்த் தனைகள் மேற்கொள்ளலாம். சில அத்தியா வசியத் தேவைகளுக்கு ரொக்கப் பணம் தேவைப்படும்போது, அவற் றுக்கு மட்டும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment