பிரான்சு: தடுப்பூசி போடாதவர்களை தரக்குறைவாக விமர்சித்த அதிபர் மேக்ரான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

பிரான்சு: தடுப்பூசி போடாதவர்களை தரக்குறைவாக விமர்சித்த அதிபர் மேக்ரான்

பாரீஸ், ஜன. 7- அய்ரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு வருகிறது. எனவே அங்கு கரோனா தடுப்பூசி யின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான் தலை மையிலான அரசு தீவிர கவனம் செலுத்தி வருகி றது.

இந்த நிலையில் பிரான் சில் கரோனா தடுப்பூசி போடாதவர்களை அதிபர் மேக்ரான் மிகவும் தரக்குறைவாக விமர்சித் தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனியார் பத்திரி கைக்கு அளித்த பேட்டியின்போது இது குறித்து அவர் கூறுகையில்தடுப் பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப் போவதில்லை. அவர்க ளைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை. வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத் தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரை யரங்குக்குள் நுழைய முடி யாது.

தடுப்பூசி போடாதவர் களை இழிவு படுத்தப் போகிறேன். நான் அவர் களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். கோபப் படுத்த விரும்புகிறேன். இதுதான் இனி அரசின் கொள்கை. நாங்கள் அதை இறுதி வரை செய்வோம்என்று கூறினார்.

பிரான்சில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க வுள்ள நிலையில் மேக் ரானின் இந்த சர்ச்சைப் பேச்சு பல்வேறு தரப்பி லும் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

No comments:

Post a Comment