நியூ ஜெர்சி, ஜன. 7- அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடு முறைக்கு பின்னர் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் அமெரிக்க மாகாணங்களில் ஒமைக்ரான் பாதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரே வாரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படு வோர் எண்ணிக்கை 76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்த மாகாணத்தின் மேயர் ஃபில் மர்ஃபி கூறுகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், ஒமைக்ரான் சுனாமி ஏற்கெனவே மருத்துவ பணியாளர்களைத் தாக்க தொடங்கி விட்ட தாகவும் தெரிவித்தார். அத்துடன், கடந்த 1 வருடத்தில் இல்லாத அளவு கரோனா தொற்று எண்ணிக்கை ஒமைக் ரானால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசியில் இருந்து தப்பிக்க மகன்களை கடத்திய பெண்
மாட்ரிட், ஜன. 7- ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயது சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், தனது 14 மற்றும் 12 வயது மகன்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படு வதை தடுக்க, அவர்களை கடத் திச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்மணி கண வரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது இரு மகன்களும் தந்தையிடம் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி முடிந்து இரு மகன்களையும் அழைத்து சென்ற பெண்மணி, தனது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதி தெரிவித்தார். இதையடுத்து சிறுவர்களின் தந்தை காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த பெண் சரண டைந்தார். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் அந்த பெண்மணியை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment