கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாதாம் எஸ்.பி.அய். விதிமுறைக்கு எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாதாம் எஸ்.பி.அய். விதிமுறைக்கு எதிர்ப்பு

புதுடில்லி, ஜன.29 ஒரு பெண்ணின் கர்ப்ப காலம்  3 மாதங்களைக் கடந்திருந் தால் அவர் பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாகப் பணிய மர்த்தப்பட மாட்டார் என்றும் அதேபோல் அவர் மூன்று மாதத்துக்கும் அதி கமான கர்ப்பக்காலத்தில் இருந்தால் பதவி உயர்விலும் பரிசீலிக்கப்படமாட்டார் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி. பெண்களின் கர்ப்பத்தை ஒட்டி வெளியிட்டுள்ள இந்த புதிய விதி முறை பரவலாக கண்டனங் களை சம்பாதித்து வருகிறது.

ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களைக் கடந்திருந்தால் அவர் பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாகப் பணியமர்த்தப்பட மாட் டார் என்றும் அதேபோல் அவர் மூன்று மாதத்துக்கும் அதிகமான கர்ப்பக்காலத் தில் இருந்தால் பதவி உயர் விலும் பரிசீலிக்கப்பட மாட்டார் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித் துள்ளது. ஒருவேளை அவர் பணியில் சேர அத்தனை தகுதியையும் பெற்றிருந் தால், பேறுகாலம் முடிந்த 4 மாதங்களுக்குப் பின்னரே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவராகக் கருதப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரளாவைச் சேர்ந்த மாநி லங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் (சிபிஎம்) ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், கர்ப்பத்தை அவமதிப்பது தாய்மைக்கு எதிரான குற் றம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு. எஸ்.பி.அய்.யின் விதிமுறைகள் இந்திய அர சியல் சாசனத்துக்கு எதிரா னது. இதில் நிதியமைச்சர் தலையிட்டு இந்த பாலின பாகுபாடு நிறைந்த சுற்றறிக் கையை எஸ்பிஅய் உடனடி யாக திரும்பப் பெற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 6 மாத கர்ப் பத்தில் இருக்கும் பெண் களைக்கூட எஸ்.பி.அய். பணியமர்த்தியது. ஆனால், மருத்துவர்களின் தகுதிச் சான்றிதழை அவசியமாக வைத்திருந்தது. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தில் இந்த காலகட்டத்தை 3 மாதம் ஆகக் குறைத்துள் ளது.


No comments:

Post a Comment