கே. அசோக்வர்தன் ஷெட்டி - ரமணி
அனைத்திந்திய பணியாளர் அமைப்பு என்றழைக்கப்படும் இந்திய நிர்வாகப் பணியமைப்பு மற்றும் இந்திய காவல்துறை பணியமைப்பு ஆகியவற்றை மிகுந்த முயற்சியுடன் உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் படேலே. தேர்ந்து எடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படும் அதற்கான பணியாளர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப் படுவர்; இவர்கள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணி யாற்றுவர். மிகப் பரந்ததொரு, பல்வேறு வேறுபாடுகள் மிகுந்த ஒரு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை முழு மையாக ஒருங்கிணைக்கப்பட்ட பணியமைப்பாக அகில இந்த நிர்வாகப் பணியமைப்பை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்று அவர் கருதினார். கள அளவில் அரசின் உயர்மட்டத்தில் மேற்கொள் ளப்படும் கொள்கைகள் திட்டங்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் இணைப்பாக அது உருவாக வேண்டும் என்று அவர் கருதினார். 1949 அக்டோபர் 10 ஆம் தேதியன்று அரசமைப்பு சட்ட சட்டமன்றத்தில் பேசும்போது, ஒரு பாதுகாப்பு உணர்வு கொண்ட, தங்கள் கருத்துகளை மனம் திறந்து பேசும் சுதந்திரம் பெற்ற ஒரு நல்ல அகில இந்திய நிர்வாகப் பணி யமைப்பு இல்லாமல் போனால், இந்த மாநிலங்களின் ஒன்றியம் சிதைந்து போய்விடும் என்பதுடன், ஒருங் கிணைக்கப்பட்ட ஓர் இந்தியா உங்களுக்கு இருக்காது என்று கூறியுள்ளார்.
முன்பு இருந்த ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்
ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் கலந்தாலோசனை நடை முறையில் அகில இந்திய நிர்வாகப் பணியமைப்பு அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு மாற்றுப் பணி அடிப்படையில் அனுப்பப் படுகின்றனர். இதில் முன்பு ஒரு ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் பொது வாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரியின் விருப்பம் இல்லாமல் எந்த ஒரு அதி காரியும் ஒன்றிய அரசுக்கு மாற்றுப் பணி அடிப் படையில் அனுப்பப் படமாட்டார்கள். இவ்வாறு ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றுப் பணி அடிப் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த அதிகாரி களின் பட்டியல் மாநில அரசுகளால், எவருடைய பெயரும் யதேச்சதிகாரத்துடன் விட்டு விடாமல், ஆண்டு தோறும் தயாரிக்கப்படும். இவ்வாறு மாநில அரசுகள்அனுப்பும் பட்டியல்களில் இருந்துதான் ஒன்றிய அரசு தனக்குத் தேவையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அவ்வாறு தேர்ந்தெடுக் கப்பட்ட அதிகாரிகள் மாநில அரசுகளால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுவித்து அனுப்பி வைக்கப்படுவர்.
அரசியல் குறுக்கிடும்போது . . .
ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இத்தகைய ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை அரசியல் காரணங்களுக்காக காற்றில் பறக்க விட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று அகில இந்திய காவல் துறை அதிகாரிகளை ஒன்றிய அரசு மாநில அரசின் விருப்பத்தையோ, அதிகாரியின் ஒப்புதலையோ கேட்காமலேயே எடுத்துக் கொண்டது. மறு நாள் ஓய்வு பெற இருந்த நிலையில் இருந்தவரான, மேற்கு வங்காள தலைமை செயலாளரை 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒன்றிய அரசுக்காக மாற்றுப் பணிஅடிப்படையில் ஒன்றிய அரசு யதேச்சதிகாரத்துடன் எடுத்துக் கொண்டது. இவ்வாறு ஒன்றிய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகள் எவரையும் மாநில அரசுகள் விடுவித்து அனுப்பவில்லை. மாற்றுப் பணியின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்குப் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த சில அதிகாரிகளின் பெயர்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் சில மாநில அரசுகள் பழிவாங்கும் முறையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவோ, அல்லது ஒன்றிய அரசு தேர்ந்தெடுத்த அதிகாரிகளை விடு வித்து அனுப்புவதை தாமதப்படுத்தவோ செய் துள்ளன. காவல்துறை அதிகாரி ஒருவரை ஒன்றிய புலனாய்வுத் துறை அதிகாரியாக அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்திருந்த போதிலும், அவரை மாநில அரசு விடுவிக்காமல் இருந்த போது, ஒன்றிய அரசின் ஆணைப்படி தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்ட அந்த அதிகாரி 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு அரசினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை இதற்கு பொருத்தமான ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
1954ஆம் ஆண்டு அகில இந்திய நிர்வாகப் பணியமைப்பு விதி 6 (1) க்கு நான்கு திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு உத்தேசித் துள்ளது. இது பற்றி மாநில அரசுகளின் கருத்தை 2022 ஜனவரி 25 ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுள்ளது. தற்போதுள்ள இந்த 6(1) விதி, சம் பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல், ஒரு மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரியை ஒன்றிய அரசுக்கோ, வேறொரு மாநில அரசுக்கோ அல்லது பொதுத்துறை நிறுவனத்துக்கோ மாற்றுப் பணி அடிப்படையில் அனுப்பக் கூடாது என்று கூறுகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒத்த கருத்து நிலவாதபோது, அந்தப் பிரச்சினை ஒன்றிய அரசி னால் முடிவு செய்யப்படும் என்ற ஒரு விதியும் இருக்கிறது.
உத்தேசிக்கப்பட்டுள்ள நான்கு திருத்தங்களில் இரண்டு திருத்தங்கள் மிகவும் கவலை அளிப்பவை யாக உள்ளன. ஒன்றிய அரசுக்கு மாற்றுப் பணி அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அகில இந்த நிர்வாக பணியமைப்பு அதிகாரிகள் ஆண்டு தோறும்அனுப்பப்படவேண்டும் என்ற திருத்தம் இதில் ஒன்றாகும். மாற்றுப் பணி அடிப்படையில் ஒன்றிய அரசு பணிக்குச் செல்வதற்கு அதிகாரிகள் விருப்பம் அற்றவர்களாக இருந்த போதிலும், அதிகாரிகளை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகளை ஏறக்குறைய கட்டாயப்படுத்துவது போலவே இது உள்ளது. இளையோர் பணி நிலைகளில் பணியாற்ற வேண்டிய மோசமான சூழ்நிலைகளும், பணிமூப்பு நிலைகளில் நியமனம் செய்யப்படும் அதிகாரிகளைத் தேர்ந் தெடுப்பதற்கான யதேச்சதிகாரம் கொண்டதொரு நடைமுறை, அனைத்து நிலைகளிலும் தற்போதுள்ள பதவியில் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும் என்பதற்கான பாதுகாப்பு இன்மை ஆகியவையே, ஒன்றிய அரசு தீர்க்கவேண்டிய, அகில இந்திய நிர்வாகப் பணியமைப்பு அதிகாரிகளின் பற்றாக் குறைக்கான உண்மையான காரணங்களாகும்.
ஒன்றிய அரசில் தேர்வுகள் மூலமாக இல்லாமல் நேரடியாக அதிகாரிகளை ஒன்றிய அரசு மிகுந்த உற்சாகத்துடன் நியமித்துக் கொண்டு வரும் நிலையிலும், ஒன்றிய அரசில் உள்ள மாற்றுப் பணி நியமனங்களில் மத்திய பணியமைப்பினருக்கு அதிக அளவில் பங்களிக்கும் நிலையிலும், விருப்பம் இல்லாத அதிகாரிகளை மாற்றுப் பணி அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு கட்டாயமாக அனுப்பவேண்டிய அவசியமே இல்லை.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒன்றிய அரசு கேட்கும் அதிகாரிகளை மாநில அரசுகள் உடனடியாக விடுவித்துவிடவேண்டும் என்பது மற்றொரு திருத்த மாகும். அண்மைக் கால அனுபவங்களை அடிப்படை யாகக் கொண்டு பார்க்கும்போது, அரசியல் காரணங் களுக்காக இந்த விதி ஒன்றிய அரசால் தவறாகப் பயன்படுத்தப் படக்கூடும் என்ற மாநில அரசுகளின் அச்சம் நியாயமான ஒன்றேயாகும். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளின் தலைமைச் செயலர், முதலமைச்சரின் முதன்மைச் செயலர், மற்றும் இதர முக்கிய மாநில அதிகாரிகளின் சேவையை ஒன்றிய அரசு யதேச்திகாரத்துடன் எடுத்துக் கொண்டாலோ அல்லது வேறொரு மாநிலத் துக்கு மாற்றி அனுப்பினாலோ, மாநில அரசுகள் என்ன செய்ய முடியும்?
நீண்ட கால பேரழிவு
அரசின் கொள்கைகள் பெரும்பாலும் மாநிலங்கள் அளவிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதனால் மிகச் சிறந்த முறையில் பணியாற்றும் அதிகாரிகளை அத்தகைய பணிகளில் நியமிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளை இந்த திருத்தங்கள் மிகமிக மோசமான அளவில் மீறுபவை களாகவே உள்ளன என்ற மாநில அரசுகளின் கண் ணோட்டம் மிகமிகச் சரியானதேயாகும். அகில இந்த நிர்வாகப் பணியமைப்பு அதிகாரிகளின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றை கடுமையாக பாதிக்க இயன்றவைகளாகவே நிறை வேற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உள்ளன. இந்த அதிகாரிகளின் விசுவாசத்தைப் பற்றி மாநில அரசகள் சந்தேகப்படுமேயானால், மாநில அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையை அவை குறைத்துவிடக்கூடும். மாநிலக் குடிமைப் பணியமைப் புகளில் எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு மாநில அதிகாரிகளைக் கையாளச் செய்வதே சிறந்தது என்று மாநில அரசுகள் கருதவும் கூடும். நாளடைவில் தனக்கு உள்ள கவர்ச்சியை அய்.ஏ.எஸ். பணியமைப்பு இழந்துவிடும். அதனால், மிகமிகச் சிறந்த பணியா ளர்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக வருவதை இனியும் விரும்பமாட்டார்கள். குறுகிய கண்ணோட் டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகள், நீண்ட கால பேரழிவுகளை ஏற்படுத்திவிடும்.
கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தைப் பற்றிய சிந்தனை
நானி பல்கிவாலாவின் சொற்களால் கூறுவதா னால், உயர் அதிகாரங்களைப் பெற்றிருந்த ஆங்கி லேய ஆட்சி வைஸ்ராயின் வாரிசுதாரர்கள் அல்ல என்று ஒன்றிய அரசுக்கு தெளிவாக நினைவூட்டுவது பற்றியதொரு தேசிய கருத்தொற்றுமை உருவாக வேண்டும். . . . . . அரசமைப்பு சட்டப்படியான ஒழுக்க நெறியைப் பின்பற்றுவது என்ற உணர்வை, குறிப்பாக மாநில அரசுகள் மீது ஒரு நீதி , நியாய உணர்வை ஒன்றிய அரசு வெளிக்காட்டவில்லை என்றால், நாட்டை ஆள்வதற்கான தார்மீக அதிகாரமே அதற்கு இல்லை. எஸ்.ஆர்.பொம்மைக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையே 1994ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்கில், சுதந்திரமாக இருப்பதற்கான அரசமைப்பு சட்டப்படியான உரிமைகளை மாநில அரசுகள் பெற்றுள்ளன. ஓர் ஒன்றிய மக்களின் அரசியல், சமூக, கல்வி, மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஒரு முக் கியமான பங்காற்ற வேண்டிய கடமையும், உரிமையும் மாநிலங்களுக்கு உள்ளன. மாநில அரசுகள் ஒன்றிய அரசின் முகவர்களோ அல்லது செயற்கைக் கோள் களோ அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
சர்தார் படேல் அவர்களின் அறிவார்ந்த ஆலோ சனையைக் கேட்டு, அதன்படி ஒன்றிய அரசு நடந்து கொண்டு, உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தங் களைக் கைவிடும் என்று நாம் நம்புகிறோம். ஒரு கூட்டாட்சி அமைப்பில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் வழக்குகளும் எழுவது தவிர்க்க முடியாதவையாகும். ஆனாலும், கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவ உணர் வுடன், உயர்ந்த தேசிய நலனை மனதில் கொண்டு அது போன்ற சண்டை சச்சரவுகள் எல்லாம் முடிவுக் குக் கொண்டுவரப்பட வேண்டும்.
நன்றி: 'தி இந்து' 21-01-2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment