தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை, ஜன.26 தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

 தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்தது.  தினசரி பாதிப்பு 30 ஆயிரம் தொட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.  தமிழ்நாட்டில் இன்றும் 30 ஆயிரத்திற்கு குறையாமல் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  கடந்த 1ஆம் தேதி 1,500க்கும் குறைவாக பாதிப்பு இருந்த சூழலில் இந்த நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை  (27.1.2022) ஆலோசனை நடத்த உள்ளார்.  வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ளன.  இதனை முன்னிட்டு மருத்துவ துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை நீட்டிப்பது நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.


No comments:

Post a Comment