போபால், ஜன.26 மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேனாள் அமைச்சரும், பாஜக தலைவரு மான இமார்தி தேவி, தனக்கு வழங்கப்பட்ட முகக் கவ சத்தை காரிலிருந்தபடியே வெளியே தூக்கி வீசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத் தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டா யம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதோரிடம் கடுமையான முறையில் அப ராதமும் வசூலிக்கப்பட்டு வருகி றது.
மத்தியப் பிரதேச மாநிலத் தில் தற்பொழுது சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, மத்தியப் பிரதேசத் தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை விரைவில் அதிகரிக் கப்படும். அவர்களுக்காக திறந்த வெளிச் சிறைகளும் அமைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், போபாலில் கடந்த 21.1.2022 அன்று, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வர்கள் முகக்கவசம் அணியாத வர்களுக்கு முகக்கவசங்களை விநியோகித்துள்ளனர். அப்போது, பாஜக தலைவர் இமார்தி தேவி முகக்கவசம் அணியாமல் தனது காரில் சென்ற நிலையில், அவருக்கும் அவர்கள் முகக்கவசத்தை வழங்கியுள்ளனர். தனக்கு அளிக்கப்பட்ட முகக் கவ சத்தைப் பெற்றுக் கொண்ட இமார்தி தேவி, கார் கிளம் பியவுடன் அதனை வெளியில் தூக்கி வீசி எறிந்துள்ளார்.
இந்த காட்சிப்பதிவு தற் போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே, பாஜக தலைவர் இமார்தி தேவி கரோனா விதிமுறை களை பின்பற்றுவதில்லை. அது மட்டுமல்ல, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, `நான் மாட்டுச் சாணத்தில் பிறந்து வளர்ந்த தால் எனக்கு கரோனா பாதிப்பு ஏற்படாது’ என்றும் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment